பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் தான் ஒப்படைக்கப் போவதில்லை என அந்நாட்டு ஜனாதிபதி பேர்டினன்ட் மார்கோஸ் கூறியுள்ளார்.
2016 முதல் 2022ஆம் ஆண்டு வரை பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ரொட்ரிகோ டுடெர்டே. போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக டுடெர்டே நடத்திய போராட்டத்தின் போது பல்லாயிரக்கணக்கானோர் பொலிஸாரால் கொல்லப்பட்டிருந்தனர்.
ஐக்கிய நாடுகளின் நீதிமன்றமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) இது தொடர்பாக விசாரணை நடத்துகிறது.
இந்நிலையில், 'டுடெர்டேவை கைது செய்வதற்கு சர்வதேச நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்தால் அவரை அந்நீதிமன்றத்திடம் ஒப்படைப்பீர்களா' என நேற்றுமுன்தினம் நடைபெற்ற, வெளிநாட்டுச் செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி பேர்டினன்ட் மார்கோஸிடம் கேட்கப்பட்டது.
அப்போது 'இல்லை' என மார்கோஸ் பதிலளித்தார்.
'அவர்கள் அனுப்பும் பிடிவிறாந்தை நாம் அங்கீகரிக்கமாட்டோம். பிலிப்பைன்ஸில் சர்வதேச நீதிமன்றத்தின் ஆதிக்கத்தை நிராகரிக்கின்றபோதும், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே இருப்போம்' என அவர் கூறினார்.
2016ஆம் ஆண்டு போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அப்போதைய ஜனாதிபதி டுடெர்டே ஆரம்பித்தார்.
மேற்படி நடவடிக்கைகளின்போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பித்ததை அடுத்து, அந்நீதிமன்றத்திலிருந்து பிலிப்பைன்ஸை 2019 ஆம் ஆண்டு டுடெர்டே விலக்கிக்கொண்டார்.
இவ்வழக்கின் முறையான விசாரணைகள் 2021 செப்டெம்பரில் ஆரம்பமாகின. எனினும், போதைப்பொருட்களுக்கு எதிரான போரின்போது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தான் விசாரணை நடத்துவதாக பிலிப்பைன்ஸ் கூறியதையடுத்து, சர்வதேச நீதிமன்ற விசாரணை இடைநிறுத்தப்பட்டது.
2022 ஆம் ஆண்டு பேர்டினன்ட் மார்கோஸ் ஜனாதிபதியாக பதவியேற்றிருந்தார்.
அதன்பின், இவ்வழக்கு விசாரணையை மீண்டும் நடத்துமாறு ஐ.சி.சி.யின் பிரதம வழக்குத்தொடுநர் கோரினார். அதற்கு 2023 ஜனவரியில் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
இத்தீர்மானத்துக்கு எதிரான பிலிப்பைன்ஸ் மேன்முறையீடு செய்தபோதிலும் அதில் தோல்வியடைந்தது.
போதைப்பொருட்களுக்கு எதிரான டுடெர்டேவின் நடவடிக்கைகளின்போது 6,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் உத்தி யோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த எண்ணிக்கை 12,000 முதல் 30,000 வரை இருக்கலாம் என ஐ.சி.சி. வழக்குத்தொடுநர்கள் கூறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM