ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான உலக சாதனையை முறியடித்தார் லீதுவேனியாவின் அலெக்னா

17 Apr, 2024 | 05:42 PM
image

(நெவில் அன்தனி)

ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார்.

முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது.

இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார்.

ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார்.

முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார்.

பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும். 

எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது.

செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை ஆரம்பவியலாளர் குத்துச்சண்டையில் வவுனியா பெண்கள்...

2025-04-24 18:14:16
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ வங்கிக்...

2025-04-24 14:32:37
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதன் சொந்த மண்ணில்...

2025-04-24 05:16:31
news-image

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் மீண்டும்...

2025-04-24 05:12:04
news-image

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் முறைமையை ...

2025-04-23 21:08:04
news-image

லக்னோவை இலகுவாக வென்றது டெல்ஹி; ஐபிஎல்...

2025-04-23 00:17:02
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேசிய உயர் செயல்திறன்...

2025-04-22 22:04:03
news-image

ஸ்டட்கார்ட் பகிரங்க டென்னிஸ் சம்பியனானார் ஒஸ்டாபென்கோ

2025-04-22 12:19:32
news-image

கொல்கத்தாவை சகலதுறைகளிலும் விஞ்சிய குஜராத் 39...

2025-04-22 00:30:24
news-image

ஆசிய 22 வயதின்கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-04-21 15:26:36
news-image

மத்தியஸ்தரின் தீர்ப்பை மறுக்கும் வகையில் பந்து...

2025-04-21 15:21:09
news-image

கோஹ்லி, படிக்கல் அபார அரைச் சதங்கள்...

2025-04-21 01:05:03