(எம்.ஆர்.எம்.வஸீம்)

வெள்ளை வேனில் வந்தவர்களால் கடத்தப்பட்ட எனது தங்கையின் ஒரே மகனான பஸ்லமை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மகனின் கவலையால் எனது தங்கை நோய்வாய்ப்பட்டுள்ளார். அவரை எப்படியாவது எங்களிடம் ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடத்தப்பட்ட பஸ்லமின் தாய் மாமாவான மொஹமட் மூஸின் வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பு புறக்கோட்டையில் காணாமலாக்கப்பட்டவர்களை விடுதலைசெய்யக் கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் ஒருவார காலத்திற்கு முன்னெடுக்கும் போராட்டம் ஆறாவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமலாக்கப்பட்ட உறவினர்களில் ஒருவரான மொஹமட் மூஸின் மிகவும் உறுக்கமாக தனது தங்கையின் மகனை பறிகொடுத்த விடயத்தை பகிர்ந்து கொள்ளும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.