சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற நடிகர் வசந்த் ரவி

17 Apr, 2024 | 05:43 PM
image

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர அந்தஸ்தை பெறுவதற்காக நம்பிக்கையுடன் கடுமையாக போராடி வரும் நடிகர்கள்.. தங்களது பிறந்த நாளில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்களது எதிர்கால திட்டங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது வாடிக்கை.

அந்த வகையில் தொழிலதிபர் ஒருவரின் வாரிசாக பிறந்து, இங்கிலாந்து நாட்டில் மருத்துவம் பயின்று, வைத்தியராக பணியாற்றாமல் ..

கலைத்துறையின் மீதான பெரு விருப்பத்தின் காரணமாக  இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான 'தரமணி' எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வசந்த் ரவி.  தொடர்ந்து 'ராக்கி', 'அஸ்வின்ஸ்', சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' ஆகிய படத்தில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார்.

இவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கையில், '' திரைத் துறையில் நடிகராக வரவேண்டும் என்று விரும்பியவுடன் முதலில் சுப்பர் ஸ்டார் ரஜினி சாரிடம் சென்று தான் அறிவுரை கேட்டேன். அதன் பின்பு அவருடன் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்தது எமக்கு மிகப்பெரிய பெருமை. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு முறை, 'உன்னை போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்கு பெருமை' என ரஜினி சார் எம்மிடம் சொன்னார். எமக்கு இதுதான் உண்மையிலேயே பெரிய விடயமாக இருக்கிறது.

'ஜெயிலர் 2' படத்தை பற்றி உங்களைப் போல் நானும் ஆர்வமுடன் காத்திருக்கிறேன். இது குறித்து இயக்குநர் நெல்சன் தான் சொல்ல வேண்டும்.

தற்போது 'வெப்பன்' எனும் எக்சன் படத்திலும், 'இந்திரா' எனும் டார்க் ஜேனரிலான படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டு திரைப்படங்களும் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை கேட்டு, வித்தியாசமான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற...

2024-05-29 17:35:12
news-image

மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும்...

2024-05-29 17:32:38
news-image

உலக நாயகன்' கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன்...

2024-05-29 17:26:07
news-image

புரட்சித் தமிழன்' சத்யராஜ் நடித்திருக்கும் 'வெப்பன்'...

2024-05-29 17:22:28
news-image

கவித்துவமான எக்சன் பொழுதுபோக்கு திரைப்படம் தான்...

2024-05-29 17:20:26
news-image

அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2-...

2024-05-29 16:58:10
news-image

செல்லப்பிராணியை தேடி இரு சிறார்களின் பயணத்தை...

2024-05-28 16:52:03
news-image

ரசிகர்களுக்கு இரட்டை பரிசை அளிக்கும் விஜய்

2024-05-28 16:10:02
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை'...

2024-05-28 16:02:09
news-image

உருவ கேலிக்கு துணை போயிருக்கும் இசைப்புயல்...

2024-05-28 06:02:25
news-image

கார்த்தி - அரவிந்த்சாமி இணையும் 'மெய்யழகன்'

2024-05-28 06:02:57
news-image

நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் 'மார்டின்'...

2024-05-28 06:05:33