இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில் பங்குபற்றிய தமிழக முதல்வர்

17 Apr, 2024 | 05:37 PM
image

இந்திய திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குநர் என்ற நற்பெயரை சம்பாதித்த இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், அமெரிக்காவை சேர்ந்த தருண் கார்த்திகேயனுக்கும் சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பின் போது, தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் பங்கு பற்றி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதன் போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களும் பங்கு பற்றி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அமெரிக்காவில் வசிக்கும் கே. கார்த்திகேயன் மற்றும் திருமதி சப்னா கார்த்திகேயனின் வாரிசான தருண் கார்த்திகேயன் பொறியியல் துறையில்  பட்டதாரியாக தேர்ச்சி பெற்றார். அவர் திரைத்துறையில் சாதிக்க விரும்பி பெற்றோர்களின் சம்மதத்துடன் இந்தியாவிற்கு வருகை தந்து, இந்திய குடியுரிமையையும் பெற்று இங்கு வாய்ப்புகளை தேடி வருகிறார். இவருக்கும், இயக்குநர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா சங்கருக்கும் பெற்றோர்களின் சம்மதத்துடன் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

இதன் வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின், திருமதி துர்கா ஸ்டாலின், 'உலகநாயகன்' கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம்சரண், திருமதி உபாசனா ராம்சரண், சூர்யா, ரன்வீர் சிங், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, மோகன்லால், விஜய் அண்டனி, எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களும், இயக்குநர் பாலா, எஸ்.பி. முத்துராமன், டி. ராஜேந்தர், விக்ரமன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திர இயக்குநர்களும், ஜி கே எம் தமிழ்குமரன், தில் ராஜு, கலைப்புலி எஸ் .தானு உள்ளிட்ட முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர்களும், ஏ. ஆர். ரஹ்மான், அனிரூத் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களும், சந்தோஷ் சிவன், ரவிவர்மன், ரத்னவேலு உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களும், தோட்டா தரணி, முத்துராஜ் உள்ளிட்ட கலை இயக்குநர்களும், வைரமுத்து, மதன் கார்க்கி, கபிலன் உள்ளிட்ட பாடலாசிரியர்களும், நடன இயக்குநர்களும், சண்டை பயிற்சி இயக்குநர்களும் பங்கு பற்றி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இவர்களுடன் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளும் பங்கு பற்றி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற...

2024-05-29 17:35:12
news-image

மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும்...

2024-05-29 17:32:38
news-image

உலக நாயகன்' கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன்...

2024-05-29 17:26:07
news-image

புரட்சித் தமிழன்' சத்யராஜ் நடித்திருக்கும் 'வெப்பன்'...

2024-05-29 17:22:28
news-image

கவித்துவமான எக்சன் பொழுதுபோக்கு திரைப்படம் தான்...

2024-05-29 17:20:26
news-image

அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2-...

2024-05-29 16:58:10
news-image

செல்லப்பிராணியை தேடி இரு சிறார்களின் பயணத்தை...

2024-05-28 16:52:03
news-image

ரசிகர்களுக்கு இரட்டை பரிசை அளிக்கும் விஜய்

2024-05-28 16:10:02
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை'...

2024-05-28 16:02:09
news-image

உருவ கேலிக்கு துணை போயிருக்கும் இசைப்புயல்...

2024-05-28 06:02:25
news-image

கார்த்தி - அரவிந்த்சாமி இணையும் 'மெய்யழகன்'

2024-05-28 06:02:57
news-image

நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் 'மார்டின்'...

2024-05-28 06:05:33