ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

17 Apr, 2024 | 05:43 PM
image

உலகம் முழுவதும் பிறக்கும் ஐயாயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஈசோபாகல் அட்ராஸியா எனப்படும் உணவு குழாய் இணைப்பு குறைபாடு பிறவியிலேயே உண்டாகிறது என்றும், இது தொடர்பான விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது என்றும், மேலும் தற்போது இதற்கு நவீன சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணங்கள் வழங்கப்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய உணவுக் குழாய் வாய் மற்றும் வயிற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும். இது இயல்பானது. ஆனால் சில பிள்ளைகளுக்கு பிறக்கும்போது உணவு குழாயின் ஒரு பகுதி வயிற்றுடன் இணைக்கப்படாமல்.. சிறிய பிளவு அல்லது தடையோ ஏற்பட்டிருக்கும்.‌ சில பிள்ளைகளுக்கு இந்த உணவுக் குழாய் துல்லியமாக இணைக்கப்படாமல் இரண்டு தனி தனி பிரிவுகளாக வளரத் தொடங்குகிறது. இதனால் குழந்தைகளுக்கு உணவு குழாய் குறைபாடு ஏற்படுகிறது. இத்தகைய குறைபாட்டால் வேறு விளைவுகளும் உண்டாகிறது.

மேலும் இத்தகைய பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கும்  ஆளாகிறார்கள். இவர்கள் வாய் மூலமாக போதுமான ஊட்டச்சத்து பெற இயலாத நிலையும் ஏற்படுகிறது.

இதன் காரணமாகவே இத்தகைய பிள்ளைகள் நிமோனியா மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற தொற்றுகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. மேலும் இதன் போது உணவுக் குழாயின் மேல் பகுதியிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும். வெகு சிலருக்கு மட்டும் மேல் பகுதி மற்றும் கீழ்பகுதி என இரண்டு பகுதிகளிலும் பாதிப்பு உண்டாகும்.

பிள்ளைகள் உணவு உண்ணும் போது இருமல் ஏற்படுவது, மூச்சுத்திணறல் உண்டாவது, தோலின் நிறம் மாறுவது, வாயிலிருந்து நுரையுடன் கூடிய உமிழ்நீர் சுரப்பது, வாந்தி, பிள்ளைகளின் உடல் எடை அதிகரிக்காத நிலை... போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை பல்லியமாக அவதானிப்பர். இதற்கு நுண்துளை சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குவர். சில குழந்தைகளுக்கு மட்டும் வளர்ச்சி பெற்றவுடன் மீண்டும் ஒரு சத்திர சிகிச்சை அவசியப்படலாம்.

டொக்டர் கோபால் சுவாமி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெட்ஸோர்ஸ் எனும் தோலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-05-29 17:38:38
news-image

இரத்த நாள பாதிப்பிற்குரிய காரணங்கள் என்ன?

2024-05-28 15:34:49
news-image

எலும்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை...

2024-05-27 16:02:28
news-image

மெனிங்கியோமா எனும் மூளையில் வளரும் கட்டி...

2024-05-24 17:46:17
news-image

வயிற்றில் நீர் கோர்ப்பு எனும் பாதிப்பிற்கு...

2024-05-23 16:37:56
news-image

இரத்த வாந்தி எனும் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2024-05-22 15:58:35
news-image

மஞ்சள் காமாலை பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-21 17:47:40
news-image

கல்லீரல் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-20 17:31:58
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு மரபணு பரிசோதனை அவசியமா.?

2024-05-18 18:08:06
news-image

கில்லன் - பாரே சிண்ட்ரோம் எனும்...

2024-05-17 18:20:50
news-image

இலங்கையில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்த...

2024-05-17 15:51:49
news-image

முதுகு தண்டுவடப் பகுதியில் ஏற்படும் நரம்புகளின்...

2024-05-16 17:36:07