ஆன்மீக அன்பர்கள் பலரும் தங்களுடைய கஷ்டங்களுக்கு விதி தான் காரணம் என்று ஒரு பிரிவினரும், விதி காரணமில்லை மதியின்மையே காரணம் என ஒரு பிரிவினரும், விதியும் இல்லை மதியும் இல்லை சரணா'கதி' அடையாததால் தான் பிரச்சனை என்றும் கூறுவர். சரணாகதி அடைந்தால் சர்வ தோஷங்களையும் நீக்கி அருள் பாலிக்கும் ஸ்தலங்கள் உலகம் முழுவதும் உண்டு. அதிலும் குறிப்பாக சென்னைக்கு அருகே திருப்போரூர் என்னும் முருகன் ஆலயத்திற்கு அருகே உள்ள பிரணவ மலை எனும் இடத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் ஆலயத்திற்கு வருகை தந்து இறைவனை தரிசித்தால், உங்களது பாவங்கள்+ தோஷங்கள் அனைத்தும் நீங்கி சுப பலன்கள் கிட்டும்.
சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லும் வழியில் 45 கி. மீ தொலைவில் அமையப் பெற்றிருக்கும் பிரணவ மலை எனும் இடத்திற்கு திருப்போரூர் வந்தவுடன் அங்குள்ள உள்ளூர் மக்களிடம் விசாரித்தால் அருகே இருக்கும் பிரணவ மலையை கைகாட்டுவர். சிறிய குன்று போல் தோன்றும் இந்த பிரணவ மலை பல புராண வரலாறுகளை தன்னுள் கொண்டிருக்கிறது.
இந்த ஆலயத்திற்கு வருகை தந்து கைலாசநாதரை வணங்கும்போது உங்களது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது. இங்குள்ள குன்று பகுதி வலம் வருவதற்காக செப்பனிடப்பட்டிருக்கிறது. பிரதோஷ வழிபாடு.. சனிக்கிழமை வழிபாடு.. இங்கு பிரபலம். தொடர்ச்சியாக ஒன்பது சனிக்கிழமைகளில் இந்த பிரணவ மலை கைலாசநாதர் ஆலயத்திற்கு வருகை தந்து, ஒன்பது முறை வலம் வந்து எம்முடைய கோரிக்கையை இறைவன் முன் சமர்ப்பித்தால்... அந்த கோரிக்கை நிறைவேறுவதை அனுபவத்தில் உணரலாம்.
தங்களது வேண்டுகோள் நிறைவேறிய பிறகு பக்தர்கள் இறைவனுக்கும், இறைவிக்கும் வஸ்திரம் சாற்றி வழிபடுகிறார்கள். இங்கு நவக்கிரக சன்னதியில் சூரியன் மற்றும் சனி ஆகியோர் மட்டுமே இருப்பதால் சூரிய ஆதிக்கம் அதிகம் என்றும், சனியின் அருளாசி அதிகம் என்றும் இங்குள்ள பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
இத்தலத்துக்கு அருகில் சித்தர் ஒருவரின் சமாதியும் உண்டு. அங்கு சென்று வழிபட்டாலும் உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM