வீதியின் குறுக்காக பாய்ந்து கொண்டிருந்த வெள்ள நீரை பொருட்படுத்தாமல், காரின் மூலம் வீதியை கடக்க முயன்றவர் விபத்துக்குள்ளான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் பெரு நாட்டின் வட பகுதியில் பதிவாகியுள்ளது.

குறித்த காணொளியில், பெரு நாட்டின் வட பகுதியில் உள்ள பிரதான பாதை ஒன்றில் திடீரென வெள்ள நீர் பாய்கின்றது. 

பாதையின் இருபுறமும் பலர் காத்துக்கொண்டிருந்த போதும், நபர் ஒருவர் வெள்ள நீரை பொருட்படுத்தாமல் காரின் மூலம் பாதையை கடக்க முயற்சிக்கின்றார்.

 எனினும் இடைநடுவில்  காரை வெள்ளம் புரட்டி விடுகின்றது.

இதனால் கார் பள்ளத்தில் பாய்ந்து சேதமாவதோடு வாகனத்தை செலுத்தியவர் எவ்வித ஆபத்தும் இன்றி உயிர் தப்பிவிடுகின்றார்.