(எம்.ஆர்.எம்.வஸீம்)

சுங்கத்திணைக்களத்தை ஊழல் அற்ற நிறுவனமாக மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் வெளிநாடுகளில் இருந்து கடன்பெற தேவை இருக்காது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டில் இருக்கும் திணைக்களங்களில் சுங்க திணைக்களத்திலேயே பாரியளவில் ஊழல் மோசடி இடம்பெற்று வருகின்றது. உயர் அதிகாரி முதல் சாதாரண ஊழியர்கள்வரை அதில் தொடர்ப்பு படுகின்றனர்.ஆரம்ப காலம் முதல் இது இடம்பெற்று வருகின்றது. அதனால் அதனை நிறுத்துவதற்கு அரசாங்கம் முறையான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.