மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர் வெளியீடு

Published By: Digital Desk 7

16 Apr, 2024 | 05:39 PM
image

'மைக் மோகன்' என ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் மோகன், சிறிய இடைவெளிக்குப் பிறகு கதையின் நாயகனாக அதிலும் எக்சன் நாயகனாக நடித்திருக்கும் 'ஹரா' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஹரா' எனும் திரைப்படத்தில் மோகன், அனுமோல், யோகி பாபு, கௌஷிக், அனித்ரா நாயர், மொட்டை ராஜேந்திரன், சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மைம் கோபி, ஆதவன், சிங்கம் புலி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரகாத் முனுசாமி மனோ தினகரன் +மோகன் +விஜய் ஸ்ரீஜி ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஷாந்த்  அர்வின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஜே எம் ஸ்டுடியோஸ் மற்றும் ஜி மீடியா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். பி. மோகன்ராஜ் தயாரித்திருக்கிறார்.

இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பங்குபற்றினர். இதன் போது படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி பேசுகையில், ''படத்தின் நாயகனாக மோகன் நடித்திருக்கிறார். அவரிடம் கதை சொன்ன போது, 'எனக்கு என்ன மார்க்கெட் இருக்கிறது.

என்னை ஏன் ஹீரோவாக நடிக்க வைக்கிறீர்கள்' என கேட்டார். ஆனால் கதை பிடித்திருக்கிறது. கதையோட்டத்தில் சிறிய மாற்றத்தை மட்டும் செய்தால் மிகச் சிறப்பாக வரும் என்று சொன்னார். அதையும் ஏற்றுக்கொண்டு படத்தை நிறைவு செய்திருக்கிறோம். இந்த திரைப்படம் எங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கிறது.

உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு அனைவரிடத்திலும் ஏற்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.‌ இப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா மோகன் அவர்களின் பிறந்த நாளான மே பத்தாம் திகதியன்று வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. இப்படத்தில் மோகனை எக்சன் நாயகனாக திரையில் காண்பித்திருக்கிறோம்.‌ '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற...

2024-05-29 17:35:12
news-image

மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும்...

2024-05-29 17:32:38
news-image

உலக நாயகன்' கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன்...

2024-05-29 17:26:07
news-image

புரட்சித் தமிழன்' சத்யராஜ் நடித்திருக்கும் 'வெப்பன்'...

2024-05-29 17:22:28
news-image

கவித்துவமான எக்சன் பொழுதுபோக்கு திரைப்படம் தான்...

2024-05-29 17:20:26
news-image

அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2-...

2024-05-29 16:58:10
news-image

செல்லப்பிராணியை தேடி இரு சிறார்களின் பயணத்தை...

2024-05-28 16:52:03
news-image

ரசிகர்களுக்கு இரட்டை பரிசை அளிக்கும் விஜய்

2024-05-28 16:10:02
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை'...

2024-05-28 16:02:09
news-image

உருவ கேலிக்கு துணை போயிருக்கும் இசைப்புயல்...

2024-05-28 06:02:25
news-image

கார்த்தி - அரவிந்த்சாமி இணையும் 'மெய்யழகன்'

2024-05-28 06:02:57
news-image

நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் 'மார்டின்'...

2024-05-28 06:05:33