'புரட்சித் தளபதி' விஷால் நடிப்பில் தயாராகி இம்மாதம் 26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் 'ரத்னம்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழ் திரையுலகில் கதை சொல்வதில் தனக்கென தனித்துவமான பாணியை அறிமுகப்படுத்தி பின்பற்றி வரும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ரத்னம்' எனும் திரைப்படத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்காக கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னோட்டத்தில் சென்னையின் ஃபேவரிட்டான கெட்ட வார்த்தை மற்றும் தமிழக முழுவதும் பிரபலமான கெட்ட வார்த்தைகளை கதாபாத்திரங்கள் உணர்வுபூர்வமாக பேசி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
இந்த திரைப்படம் தமிழக -ஆந்திரா எல்லையை கதைகள பின்னணியில் நடைபெறுவது போல் கதை அமைக்கப்பட்டிருப்பதும், இயக்குநர் ஹரி தன்னுடைய வழக்கமான பாணியில் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருப்பதும் முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாகவே இந்த ரத்னம் படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM