நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லோரன்ஸ் அறக்கட்டளை ஒன்றை நிறுவி மாற்று திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை செய்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். கை கொடுக்கும் கை எனும் பெயரில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளின் கலைக் குழு, ராகவா லோரன்ஸ் பங்குபற்றும் நிகழ்ச்சிகளில் மேடை ஏறி நடனமாடி பார்வையாளர்களை மகிழ்விப்பதுண்டு.
இந்நிலையில் தற்போது இந்தக் குழு தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் எனும் கலையை கற்றுக்கொண்டு அதனை மேடையேற்றி நிகழ்த்தி காட்டி பார்வையாளர்களின் கவனத்தையும், கரவொலியையும் பெற்று வருகிறார்கள்.
இதனை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது மல்லர் கம்பம் கலையில் பயிற்சி பெற்ற கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளிகள் குழுவினரும், அவர்களுக்கு கலையை கற்பித்த குழுவினரும் பங்குபற்றினர்.
இது தொடர்பாக நடிகர் ராகவா லோரன்ஸ் பேசுகையில், '' கை கொடுக்கும் கை கலைக் குழுவில் இடம் பெற்றிருக்கும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு என்னாலான முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். இக்குழுவினரின் மேடை நடன நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் தற்போது குறைந்துள்ளது.
இதனால் அவர்கள் தங்களுக்கான வாழ்வாதாரத்தை அவர்களே தேடத் தொடங்கினார். தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் எனும் கலையை கற்று அதனை மேடையில் நிகழ்த்திக் காட்டினால் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த கலையை கற்றுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக என்னிடம் அவர்கள் பேசியபோது முதலில் அந்த கலையை கற்பிக்கும் குருவை வரவழைத்து இந்தக் கலையை கற்பதால் ஏற்படும் பாதக அம்சங்களை பற்றி விவாதித்தேன். அவர்கள் முழு நம்பிக்கையுடனும் பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டதாலும், என்னுடைய குழுவில் உள்ளவர்களும் இதற்கு தன்னம்பிக்கையுடன் கற்றுக் கொள்ள தயாராக இருந்ததாலும் இதற்கு சம்மதம் தெரிவித்தேன்.
மூன்று மாத இடைவிடாத பயிற்சிக்கு பிறகு தற்போது இந்த குழுவினர் மேடையில் மல்லர் கம்பம் கலையை நிகழ்த்தி காட்டியது என்னை மெய் மறக்கச் செய்தது. அத்துடன் அவர்களின் தன்னம்பிக்கையை மனதார பாராட்டுகிறேன். மேலும் இவர்களுக்கு உதவும் வகையில் இந்த குழுவில் உள்ள அனைவருக்கும் என் சார்பில் துவிச்சக்கர வாகனங்களை இலவசமாக வழங்குகிறேன்.
இந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்காக அதாவது வீடுகளை கட்டுவதற்காக ஒரு திரைப்படத்தில் விரைவில் நடிக்கவிருக்கிறேன்.
அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் இவர்களுக்கு வீடுகள் கட்டித் தருவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். மேலும் தமிழகம் முழுவதும் உங்களுடைய வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்வுகளுக்கு இந்த குழுவினருக்கு ஆதரவு அளித்து அவர்களின் வாழ்க்கை மேம்பட உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM