டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா 'உப்பு புளி காரம்'...!?

Published By: Digital Desk 7

16 Apr, 2024 | 05:45 PM
image

படமாளிகைக்குச் சென்று திரைப்படங்களை காண்பதற்கு உள்ள ரசிகர்களின் கூட்டத்திற்கு இணையாக தற்போது இல்லம், பயணம், அலுவலகம் என எங்கு ஓய்வு நேரம் கிடைத்தாலும், அதில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் படைப்புகளை கண்டு ரசிப்பதற்கான இளைய தலைமுறை ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

இந்த ரசிகர்களுக்காக முன்னணி டிஜிட்டல் தள நிறுவனங்கள் புதிய புதிய திரைப்படங்களையும், இணைய தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் அதிக அளவிலான சந்தாதாரர்களை கொண்டிருக்கும் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் . 'மத்தகம்', 'லேபிள்', 'ஹார்ட் பீட்' என தொடர்ந்து இணைய தொடர்களை வழங்கி ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றது. வெற்றி பெற்ற இணைய தொடர்களைத் தொடர்ந்து 'உப்பு புளி காரம்' எனும் பெயரில் புதிய இணைய தொடரை உருவாக்கி இருக்கிறது.

இயக்குநர் எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'உப்பு புளி காரம்' எனும் இணைய தொடரில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஸ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரீனா,  ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பார்த்திபன் மற்றும் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணைய தொடருக்கு ஷேக் இசையமைத்திருக்கிறார். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் என்னும் டிஜிட்டல் தள நிறுவனத்திற்காக இந்த இணைய தொடரை விகடன் டெலி விஸ்டாஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.

இணைய தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில், ''நவீன தலைமுறையினரின் காதல் மற்றும் உறவுகள் பற்றியும், இதன் மேலாண்மையை தற்போதைய இளைய தலைமுறையினர் எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்பதையும் , அவர்களின் சமூக பொறுப்புணர்வு குறித்தும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கி இருக்கிறோம்'' என்றார்.

இந்த 'உப்பு புளி காரம்' எனும் இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இது வழக்கமான தொடராக இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என்பதை உணர்த்துவதால்.. டிஜிட்டல் தள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பி டி சார் - விமர்சனம்

2024-05-24 18:05:37
news-image

பொபி சிம்ஹா நடிக்கும் 'நான் வயலன்ஸ்'...

2024-05-24 17:55:21
news-image

விதார்த் நடிக்கும் 'அஞ்சாமை' படத்தின் ஃபர்ஸ்ட்...

2024-05-24 17:51:41
news-image

ஷாருக்கான் சிகிச்சைக்காக கேடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

2024-05-23 22:55:55
news-image

சாமானியன் - விமர்சனம்

2024-05-23 16:34:31
news-image

'என் தாய் மண் மேல் ஆணை...

2024-05-23 16:17:03
news-image

மாற்றுத்திறனாளியான பிள்ளையின் வாழ்வியலை பேசும் 'பிள்ளையார்...

2024-05-23 15:22:38
news-image

'கருடன் திரைப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கி...

2024-05-22 14:29:12
news-image

'புரட்சித் தமிழன்' சத்யராஜ் கௌரவ வேடத்தில்...

2024-05-21 17:47:04
news-image

யோகி பாபு நடிக்கும் 'வானவன்' படத்தின்...

2024-05-21 17:46:33
news-image

மே இறுதியில் வெளியாகும் 'உப்பு புளி...

2024-05-20 18:38:34
news-image

நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 'தேவரா...

2024-05-20 17:27:22