மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின் 'சபரி'

Published By: Digital Desk 7

16 Apr, 2024 | 05:41 PM
image

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட பிறகு  சினிமா துறையில் தனது கலை சேவையை தொடர்ந்து செய்து வரும் திருமதி வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'சபரி' எனும் திரைப்படம் மே மாதம் மூன்றாம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகிறது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சபரி' எனும் திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, பேபி கிருத்திகா, ராஜஸ்ரீ நாயர், பிரபு, அர்ச்சனா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ராகுல் ஸ்ரீ வத்சவ் மற்றும் நானி ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.

சைக்காலஜிக்கல் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மகா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேந்திர நாத் கொண்ட்லா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியிடப்பட்டது. ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் தற்போது இப்படம் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணத்திற்கு பிறகு வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்திற்கு அவருடைய ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்