நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தீ விபத்து

Published By: Digital Desk 3

16 Apr, 2024 | 04:28 PM
image

நுவரெலியா, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் கல்கந்தை தோட்ட பிரிவில் தீ விபத்து சம்பவம் ஒன்று இன்று செவ்வாய்கிழமை (16) அதிகாலை 02 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து சம்பவத்தில் கல்கந்தை தோட்டத்தில் இயங்கிய வரும் பிள்ளைகள் அபிவிருத்தி நிலையம்  திடீர் தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து வரும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த தீ விபத்து சம்பவம் மின்சார ஒழுக்கு காரணமாகவா அல்லது யாரேனும் தீ வைத்துள்ளனரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை செய்து வருகின்றனர்.

அதேநேரத்தில் குறித்த பிள்ளைகள் அபிவிருத்தி நிலையம் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் காணப்படுகிறது.

தீ விபத்து இடம்பெற்ற சமயத்தில் பாரிய வெளிச்சமும் புகை நாற்றமும் வருவது உணர்ந்த அருகில் வசிக்கும் மக்கள் வீட்டு விட்டு வெளியில் பதறி கொண்டு வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கின்றனர்.

அதேநேரத்தில் இந்த தீ விபத்தினால் சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் கூரை பகுதி பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்ப கல்வி கற்கும் சிறார்களின் புத்தகங்கள், உபகரணங்கள் பல தீப்பிடித்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது இளங்கலை மாணவர்களின்...

2024-05-29 01:44:39
news-image

கண்டியில் பிரபல வர்த்தகர் ஒருவர் 20...

2024-05-29 01:41:06
news-image

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20...

2024-05-29 01:29:28
news-image

55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும்...

2024-05-29 01:25:16
news-image

அரசியலமைப்பிற்கமைய ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி...

2024-05-29 01:17:00
news-image

தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது -...

2024-05-29 01:14:15
news-image

தர்மலிங்கம் சித்தார்த்தன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின்...

2024-05-29 01:07:01
news-image

தேர்தல் ஆணைக்குழுவினருக்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி...

2024-05-29 00:12:16
news-image

யாழில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிக்குள் பொதுமக்கள்...

2024-05-28 23:52:36
news-image

கிராம சேவகர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பில்...

2024-05-28 20:44:18
news-image

சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் பணம் சம்பாதிக்கவே...

2024-05-28 20:32:41
news-image

கொழும்பு மாநகர எல்லை பிரதேசத்தில் இருக்கும்...

2024-05-28 20:02:37