திவுல்வெவ பிரதேசத்தில் காணி ஒன்றில் சட்டவிரோதமாக உள்நுழைந்து அந்த காணியில் வசிப்பவரை தாக்கி பதினான்கு பற்களை உடைத்த சம்பவம் தொடர்பில் வந்தேகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இவர் கெப்பித்திகொல்லவ நீதிவான் நீதிமன்றில் கடந்த (13) ஆம் திகதி ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கபுகொல்லேவ பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் திறப்பனை பொலிஸ் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான பெண் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, பல் வைத்தியர்கள் அவரை பரிசோதித்து பதினான்கு பற்கள் வாயில் நீண்டு கொண்டிருப்பதாகவும்,பற்களை சரிசெய்வதற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
40 வயதான பெண் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளான இவருடைய மகன் செய்த முறைப்பாட்டினையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் கான்ஸ்டபிளும் அவரது சகோதரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கபுகொல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM