எம்மில் அனைவரும் தங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படும் காலகட்டங்களிலும், மனரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாரிய அழுத்தங்கள் ஏற்படும் தருணங்களிலும் அதிலிருந்து விடுபட்டு நாளாந்த கடமைகளை செய்வதற்கான மனவலிமை பெறுவதற்காக இறை நம்பிக்கையையும், இறைவனையும் நாடுவோம்.
இதன் போது எம்மில் பெரும்பாலானவர்கள் தங்களது குடும்ப ஜோதிடர்களின் அறிவுரைகளை கேட்டு தங்களை சீர்படுத்திக் கொள்வர். ஜோதிடர்கள் உங்களது நாம யோகத்தை கேட்பர். இந்த வினாவிற்கு எம்மில் பலரிடத்திலும் விடை இருக்காது.
ஏனெனில் நாம் யாவரும் நாம யோகங்களை பற்றி தெரிந்து வைத்திருப்பதில்லை. ஆனால் நாம யோகங்களும் நமக்கு யோகத்தை வழங்கும் சக்தி படைத்தவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நாம் இந்த பிறவியில் எந்தெந்த யோகங்களை எந்தெந்த சூழலில் பெறுவோம் என்பதற்கு நாம் பிறந்த நாம யோகங்களே சாட்சி.
27 நட்சத்திரங்களை பற்றி தெரிந்து கொண்டிருப்போம். 15 திதிகளை பற்றியும் தெரிந்து கொண்டிருப்போம். கரணங்களை பற்றியும் தெரிந்து வைத்துக் கொண்டிருப்போம்.
அதேபோல் 27 நாம யோகங்களும் உள்ளன. இதனை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் மூன்று மூன்று என ஒன்பது வகைகளாக பிரித்து, அவற்றிற்கு நவகிரகங்களில் ஒருவரை யோகியாகவும், மற்றொருவரை அவயோகியாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உங்களது பிறந்த நாம யோகத்திற்குரிய யோகாதிபதி வாழ்க்கை முழுவதும் யோகங்களை வழங்குவதற்கு கடமைப்பட்டவராகிறார். ஆனால் அந்த யோகங்களை வழங்குவதற்கு கிரக வலிமை மிகவும் அவசியம்.
உங்களுடைய ஜாதகத்தில் யோகங்களை வழங்கும் யோகாதிபதி வலிமையாக இருந்தால் உத்தமமான நாம யோகமாக இருந்தால் உங்களுக்கான பலன்கள் 100 சதவீதம் கிடைக்கும். அதே தருணத்தில் உங்களின் ஜாதகத்தில் யோகங்களை வழங்கும் யோகாதிபதி யோகங்களை வழங்கு முடியாத நிலையில் இருந்தால், நேரடியாக யோகங்களை வழங்காமல் மறைமுகமாகவும், சூட்சுமமாகவும் யோகங்களை வழங்குவதுடன் அசுப பலன்களை தரமாட்டார். இதற்கும் உங்களுடைய ஜாதகத்தில் யோகாதிபதியின் வலிமை அவசியம்.
தற்போது 27 நாம யோகங்களில் யோகியையும், அவயோகியையும் பட்டியலிடப்பட்டிருப்பதைக் காண்போம்.
விஷ்கம்பம் -கண்டம்-பரிகம்- ஆகிய மூன்று நாம யோகங்களுக்கு சனி பகவான் யோகியாகவும், சந்திர பகவான் அவயோகியாகவும் அருள் பாலிப்பார்.
ப்ரீதி - விருத்தி- சிவம்- ஆகிய மூன்று நாம யோகங்களில் பிறந்தவர்களுக்கு புதன் பகவான் யோகியாகவும், செவ்வாய் பகவான் -அவ யோகியாகவும் செயல்படுவர்.
ஆயுஷ்மான் -துருவம்- சித்தம் ஆகிய மூன்று நாம யோகங்களில் பிறந்தவர்களுக்கு கேது பகவான் யோகியாகவும், ராகு பகவான் அவ யோகியாகவும் செயல்படுவார்.
சௌபாக்கியம்- வியாகதம் -சாத்தியம் ஆகிய மூன்று நாம யோகங்களுக்கு சுக்கிர பகவான் யோகியாகவும், குரு பகவான் அவ யோகியாகவும் செயல்பட்டு அருள் பாலிப்பர்.
ஷோபனம்-ஹரிசனம்- சுபம் ஆகிய மூன்று நாம யோகங்களில் பிறந்தவர்களுக்கு சூரியன் யோகியாகவும், சனி அவயோகியாகவும் அருள் பாலிப்பர்.
அதிகண்டம் -வச்சிரம்- சுப்பிரம் ஆகிய நாம யோகங்களுக்கு சந்திரன் யோகியாகவும், புதன் அவ யோகியாகவும் வருவர்.
சுகர்மம்- சித்தி- பிராமியம்- செவ்வாய் யோகியாகவும், கேது அவயோகியாகவும் செயல்படுவர்.
திருதி -வியாதீபாதம் -ஐந்திரம் ராகு பகவான் யோகியாகவும், சுக்கிர பகவான் அவயோகியாகவும் செயல்படுவர் .
சூலம் -வரியான்- வைதிருதி ஆகிய மூன்று நாம யோகங்களில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் யோகியாகவும், சூரிய பகவான் அவயோகியாகவும் செயல்படுவர்.
யோகியாகவும் அவயோகியாகவும் அருள் பாலிக்கும் நவகிரகங்களின் பிரத்யேக தலங்களுக்குச் சென்று நவகிரகங்களையும் வணங்குவதன் மூலமாகவும் யோகங்களை பெற முடியும் என்றும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். நீங்கள் பிறந்திருக்கும் நாம யோகத்திற்குரிய யோகியையும், அவயோகியையும் அறிந்து கொண்டு அந்த யோகத்தை வழங்கும் ஆற்றல் படைத்த ஆலயத்திற்கு சென்று அங்குள்ள இறைவனை வணங்கி யோகத்தை பெறுவதற்கான வழிகளை உண்டாக்கிக் கொள்ளுங்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM