பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7 பேர் கைது!

16 Apr, 2024 | 01:15 PM
image

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட  விசேட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சுற்றிவளைப்பின் போது பாதாள உலக குழுக்களைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் 4 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 26 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் அதுருகிரிய , மாலபே ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அதுருகிரிய , கொழும்பு 15 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 46 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் பொல்வத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹிக்கடுவை  பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால்  கம்பஹா, ராகமை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்  கணேமுல்ல , ராகமை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 36 மற்றும் 38 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக குற்றக் குழுக்களைச் சேர்ந்த 423 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகளை தூய்மைப்படுத்தும்...

2025-01-19 20:06:47
news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22
news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் 

2025-01-19 18:09:02
news-image

மட்டக்களப்பில் குளங்கள் நிரம்பி வான் பாயும்...

2025-01-19 19:04:51
news-image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி...

2025-01-19 17:09:55