(க.கமலநாதன்)

தமிழ் ஊடகங்கள்  எனது செய்திகளை திரிபு படுத்தி வெளியிடுகின்றது எனவே அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என தமிழ் ஊடங்களுக்கு அறிவிப்பதாக தேசிய கலந்துரையாடல் சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு கதிரேசன் வீதி புனர்நிர்மாண பணிகளை பார்வையிட வந்திருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் ஊடகங்கள் எனது செய்திகளை திரிபுபடுத்தி வெளியிடுவதை காணமுடிகின்றது. அதனால் செய்தி ஆரசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இது குறித்து அவதானம் செலுத்த கோருகி்ன்றேன்.

எனது கருத்துகளை திரிபு படுத்தாமல் முழுமையாக எனது கருத்துக்களை வெளியிடுங்கள் ஏனெனில் நான் தமிழ் மொழியில் ஒரு விடயத்தினை கூறிவிட்டு சிங்கள மொழியில் வேறு விடயத்தினை கூறுவதி்ல்லை இரு மொழியிலும் ஒரே விடயத்தினையே கூறுகின்றேன் எனவே எனது கருத்துக்களை திரிபு படுத்தி வெளியிடுவதைத் தவிருங்கள்.

அதனை புரிந்துகொண்டுஇ தமிழ் மொழியில் எனது செய்திகளை கொண்டு செல்பவர்கள் இது குறித்து கவனமெடுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.