சிட்னியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் இடம்பெற்ற கத்திகுத்துதாக்குதல் மதரீதியான நோக்கம் கொண்ட பயங்கரவாததாக்குதல் என அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அஸ்ஸிரியன் கிறிஸ்ட் தகுட் செப்பர்ட் தேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் குறித்தே அவுஸ்திரேலிய காவல்துறையினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது மதரீதியான நோக்கத்தை கொண்ட பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள காவல்துறையினர் இதுமதரீதியான பயங்கரவாத தாக்குதல் என தாங்கள் கருதுவதாக உறுதியாக தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்து தாக்குதலிற்கு இலக்கான மதகுரு சத்திரகிசிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் அவர் உயிர் பிழைத்தது அதிஸ்டம் என நியுசவுத்வேல்ஸின் காவல்துறை ஆணையாளர் கரென் வெப் தெரிவித்துள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட 16 வயது இளைஞன் மதகுருவை நோக்கி சென்றவேளை மதரீதியான கருத்துக்களை தெரிவித்தான் எனவும் தெரிவித்துள்ள அவர் ஆராதனைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டிருந்தவேளை கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது ஆராதனையில் கலந்துகொண்டவர்களை மாத்திரமின்றி அதனை பார்வையிட்டுக்கொண்டிருந்தவர்களையும் அச்சுறுத்துவதே இதன் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM