இன்றைய வானிலை

16 Apr, 2024 | 06:15 AM
image

மேல், வடமேல் மற்றும் வட  மாகாணங்களில்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். 

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய, சப்ரகமுவ மற்றும்  மேல்  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

மட்டக்களப்பு  தொடக்கம் பொத்துவில்  ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான  கடல்  பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்கிழக்குத் திசையில் இருந்து அல்லது  மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட  காணிகளை விடுவிக்க முடியுமா?...

2025-03-25 19:14:12
news-image

தேர்தலில் அரசாங்கத்தின் வாக்குகள் சிதறப் போகின்றன...

2025-03-25 17:05:57
news-image

தேர்தலுக்காக பொய் கூறும் அரசாங்கத்துக்கு மக்கள்...

2025-03-25 17:06:50
news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

"சிவாகம கலாநிதி" தானு மஹாதேவ குருக்களின்...

2025-03-25 18:49:33
news-image

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட...

2025-03-25 18:33:35
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட...

2025-03-25 18:53:59
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02
news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47
news-image

முச்சக்கரவண்டியிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு :...

2025-03-25 17:04:04