யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர் கைது

Published By: Vishnu

16 Apr, 2024 | 01:31 AM
image

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்டார்.

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குருநகர் பகுதியில் கடந்த வாரம் இரு வேறு இடங்களில் 90,000 ரூபாய் பணத்தையும் ஐந்தரைப் பவுன் பெறுமதியான நகையையும் திருடிச் சென்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 23 வயதான சந்தேக நபர் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

போதைப்பொருள் பாவனைக்காகவே தான் திருடியதாகச் சந்தேக நபர் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், நகை மற்றும் பணம் என்பன மீட்கப்பட்ட பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22
news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் 

2025-01-19 18:09:02
news-image

மட்டக்களப்பில் குளங்கள் நிரம்பி வான் பாயும்...

2025-01-19 19:04:51
news-image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி...

2025-01-19 17:09:55
news-image

பன்னல வனப் பகுதியில் ஆண், பெண்...

2025-01-19 16:58:07
news-image

இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவதான் கிளின்...

2025-01-19 19:02:36
news-image

அடைமழையினால் நுவரெலியா - உடப்புசல்லாவை பிரதான...

2025-01-19 16:50:40
news-image

கொழும்பு முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-01-19 16:52:59