வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில் நடவடிக்கை - ரஞ்சித் சியம்பலாபிடிய

Published By: Vishnu

15 Apr, 2024 | 10:57 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் பொருளாதார நிலைமை இன்னும் ஓரளவு ஸ்திர நிலைக்கு வரும் சந்தர்ப்பத்தில் பொருட்கள் மற்றும் வாகனம் இறக்குமதி செய்யும் வரையறையை இலகுபடுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு தொடர்பில் பதற்றப்படத் தேவையில்லை. எமது கையிருப்பை படிப்படியாக அதிகரித்து வருகிறோம், மத்திய வங்கியிடம் எமது கையிருப்பு தொகை பூஞ்சியத்திலேயே இருந்தது. என்றாலும் தற்போது அது 5பில்லியன் டொலர்வரை அதிகரித்துக்கொண்டிருக்கிறோம். பாரிய அர்ப்பணிப்புடனே இதனை மேற்கொள்ள முடியுமாகி இருக்கிறது. அதேபோன்று பாரியளவில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்து வந்தது. அதனை தற்போது கட்டுப்படுத்த முடியுமாகி இருக்கிறது.

பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துச் சென்றது. அதிகரிக்கப்பட்ட பொருட்களின் விலை ஓரளவு குறைக்கப்பட்டிருக்கிறது. பணவீக்கமும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு. விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் நாட்டுக்குள் அமைதியின்மை இருந்து வந்தது. ஆனால் அந்த நிலை தற்போது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 

மேலும் பல வருடங்களுக்குப் பின்னர் தமிழ் சிங்கள புத்தாண்டை மக்களுக்கு ஓரளவேனும் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியுமான சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்த நிலை இருக்கவில்லை. அதனால் நாட்டிலிருந்து வந்த பாரிய பிரச்சினைகள் படிப்படியாகத் தீர்க்கப்பட்டுள்ளன. அதனை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.

அதேபோன்று இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்திருந்தோம். என்றாலும் அத்தியாவசிய பொருட்களுக்கு அந்த கட்டுப்பாடுகளை படிப்படியாக இலகு படுத்திவந்தோம். தற்போது வாகன இறக்குமதியை மாத்திரமே நிறுத்தி இருக்கிறோம். அதிலும் தேவைக்கேற்ப அந்த கட்டுப்பாடுகளை நீக்கி இருக்கிறோம். சுற்றுலாத்துறைக்குத் தேவையான 750 வேன் மற்றும் 250 பஸ்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கி இருக்கிறோம். 

எனவே எதிர்காலத்தில் மிகவும் அவசியமான வாகனங்களை வரையறையுடன் இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதனால் நாட்டின் பொருளாதாரம் இன்னும் ஓரளவு ஸ்திர நிலையை அடையும் பட்சத்தில் இறக்குமதி செய்யக் கட்டுப்படுத்தி இருக்கும் பொருட்கள் மற்றும் வாகன இறக்குமதிக்கான வரையறைகளை இலகுபடுத்த முடியுமாகும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இன்று...

2025-03-17 09:36:04
news-image

கரையோர ரயில் சேவைகள் தாமதம் 

2025-03-17 09:18:26
news-image

மிதிகமவில் துப்பாக்கிச் சூடு 

2025-03-17 09:00:43
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; வேட்பு...

2025-03-17 09:10:34
news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21
news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை : ...

2025-03-17 04:45:11
news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58