நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்; ஒரே ஒவரில் 6 சிக்ஸ்கள் விளாசல்

Published By: Vishnu

15 Apr, 2024 | 06:45 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஒவரில் 6 சிக்ஸ்களை விளாசி நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங் ஆய்ரீ வரலாறு படைத்துள்ளார்.

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 6 சிக்ஸ்கள் விளாசிய மூன்றாவது வீரர் திப்பேந்த்ரா சிங் ஆவார்.

ஆசிய கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச ரி20 பிறீமியர் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கத்தாருக்கு எதிராக அல் அமீரத் விளையாட்டரங்கில் இந்த அரிய மைல்கல் சாதனையை திப்பேந்த்ரா சிங் ஆய்ரீ நிலைநாட்டினார்.

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனைக்கான பட்டியலில் இந்தியாவின் யுவ்ராஜ் சிங், மேற்கிந்தியத் தீவுகளின் கீரன் பொலார்ட் ஆகியோருடன் ஆய்ரீ இணைந்துகொண்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக 2007இல் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலேயே யுவ்ராஜ் சிங் முதலாவது வீரராக ஒரே ஓவரில் 6 சிக்ஸ்களை விளாசியிருந்தார். ஸ்டுவர்ட் ப்றோடின் ஓவரிலேயே யுவ்ராஜ் சிங் இந்த சாதனையை முதன் முதலில் நிலைநாட்டியிருந்தார்.

14 வருடங்கள் கழித்து கூலிஜ் விளையாட்டரங்கில் 2021இல் நடைபெற்ற இலங்கையுடனான  சர்வதேச ரி20 கிரிக்கெட்  போட்டியில் அக்கில தனஞ்சயவின் ஓவரில் கீரன் பொலார்ட் 6 சிக்ஸ்களை விளாசினார்.

ஆசிய கிரிக்கெட் பேரவை சர்வதேச ரி20 பிறீமியர் கிண்ண கிரிக்கெட்டில் 19 ஓவர் நிறைவில் ஆய்ரீ 15 பந்துகளில் 28 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

கத்தார் வீரர் கம்ரன் கான் வீசிய கடைசியும் 20ஆவதுமான ஓவரில் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸாக விளாசிய ஆய்ரீ, 21 பந்துகளில் 64 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

கத்தாருடனான போட்டியில் 32 ஓட்டங்களால் நேபாளம வெற்றிபெற்றது.

நேபாளம் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்களைக் குவித்தது.

கத்தார் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழற்து 178 ஓடடங்களைப் பெற்றது.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஆய்ரீ, தனது 17ஆவது வயதில் நேபாளத்தின் சிரேஷ்ட அணியில் இடம்பிடித்தார்.

சீனாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட் போட்டியில் மொங்கோலியாவுக்கு எதிராக 6 சிக்ஸ்களை தொடர்ச்சியாக விளாசியிருந்தார். ஆனால் அந்த சிக்ஸ்கள் 2 வேறு ஓவர்களில் பெறப்பட்டிருந்தது.

அப் போட்டியில் 9 பந்துகளில் 50 ஓட்டங்களைக் குவித்து அதிவேக அரைச் சதத்தைப் பூர்த்திசெய்த சாதனையாளரானார்.

அதற்கு முன்னர் யுவ்ராஜ் சிங் 12 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்று முன்னைய அதிவேக அரைச் சத சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார்.

ஆய்ரியின் இந்த சாதனைகளானது ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேபாளத்துக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் என்பது உறுதி.

கரிபியன் தீவுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் கூட்டாக ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஜூன் மாதம்  கூட்டாக  நடைபெறவுள்ளது.

அப் போட்டியில் தென் ஆபிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் டி குழுவில் நேபாளம் இடம்பெறுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இங்கிலாந்துக்கு 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் ...

2024-05-28 19:17:09
news-image

சினா க்ரோன் ப்றீ 400 மீ....

2024-05-28 17:59:53
news-image

தேசிய கராத்தே தெரிவுக்குழு 2024 !

2024-05-28 10:23:17
news-image

பங்களாதேஷைவிட வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை...

2024-05-27 19:58:22
news-image

ரி20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி:...

2024-05-27 18:36:04
news-image

மகேஸ்வரன் சவால் கிண்ண யாழ். மாவட்ட...

2024-05-27 17:47:06
news-image

இலங்கையில் கால்பந்தாட்டத்தை முன்னேற்ற லைக்கா ஞானம்...

2024-05-27 15:59:29
news-image

உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கம்...

2024-05-27 13:31:34
news-image

ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வீழ்த்தி  ஐபிஎல்...

2024-05-27 01:37:33
news-image

ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டி இன்று...

2024-05-26 10:41:17
news-image

MCA - ஹொண்டா ஜீ பிரிவு...

2024-05-26 09:38:45
news-image

 உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின்...

2024-05-25 20:58:29