எம்மில் பலருக்கும் தற்போதுள்ள செல்வ நிலையிலிருந்து மேம்பாடு அடைந்து உயர்வடைய வேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும். வேறு சிலருக்கு தன வரவு என்பது இல்லாதிருக்கும்.
ஆனால் அவர்களும் வேறு வழி இல்லாமல் வாழ வேண்டியதிருக்கும். இந்நிலையில் இவர்கள் செல்வ நிலையை உயர்த்தி அருள் பாலிக்கும் கொட்டையூர் ஸ்ரீ கோடீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சுயம்பு சிவபெருமானை வணங்கினால் நல்ல பலன் கிட்டும் என எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அத்துடன் இந்த தலத்து இறைவனை வணங்குவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய மற்றொரு நிபந்தனையையும் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.
தன வரவு என்பது சிறிதும் இல்லாதவர்கள் பொருளாதார நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் உயர்வு என்பதை இல்லாத நிலையில் உள்ளவர்கள் வரவிற்கும், செலவிற்கும் பற்றாக்குறை உள்ளவர்கள் வாழ்க்கையை வாழ்வதற்காக அதாவது நாளாந்த வாழ்க்கையை வாழ்வதற்காகவே கடன் படுபவர்கள் இத்தகைய ஆலயத்திற்கு வருகை தந்தால் அவர்களின் வாழ்க்கை பொருளாதார நிலை உயரும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
இலங்கை மண் என்பது எப்போதும் சிரஞ்சீவியாக இருந்து அருள் பாலிக்கும் விபீஷணனின் அருளாசிக்கு உட்பட்டது என்பது எம்மில் அனைவருக்கும் தெரியும் விபீஷணனை வணங்குபவர்கள் இன்றும் மங்காத செல்வ நிலையுடன் இருப்பதையும் காணலாம். இத்தகைய விபீஷணன் அவருக்கு சிரஞ்சீவி நிலையை வரம் அளித்த ராமபிரானை அடைக்கலம் புகுந்து அருளாசி பெற்ற தலம் தனுஷ்கோடி ஸ்ரீ கோதண்ட ராமர் ஆலயமாகும்.
இந்த ஆலயத்திற்கு வருகை தந்து ஸ்ரீ கோதண்ட ராமரை தரிசித்து, அதன் பிறகு நேராக கும்பகோணம் எனும் புனித நகருக்கு சென்றடைய வேண்டும். அங்கிருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கொட்டையூர் ஸ்ரீ கோடீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று அங்கு சுயம்புவாய் அருள் பாலிக்கும் கோடீஸ்வரரை தரிசிக்க வேண்டும்.
இந்த தருணத்தில் எம்மில் பலருக்கும் ஏன் நேரடியாக கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூருக்கு சென்று அங்கு வீற்றிருருந்து அருள் பாலிக்கும் கோடீஸ்வரரை தரிசிக்கலாமே.. ! எதற்காக தனுஷ்கோடி சென்று அதன் பிறகு அங்கிருந்து செல்ல வேண்டும்? என கேட்பர். கொட்டையூர் ஸ்ரீ கோடீஸ்வரரை தரிசனம் செய்வதற்கும் முன் நீங்கள் உங்களுடைய பாவங்களை தொலைத்திருக்க வேண்டும். பாவங்களுடன் இந்த மண்ணை மிதித்து ஸ்ரீ கோடீஸ்வரரை தரிசித்தால் உங்களுடைய பாவங்கள் அதிகரிக்குமே தவிர புண்ணியங்கள் அதிகரித்து அதனால் பலன்கள் கிடைக்காமல் போகக்கூடும். எனவே தனுஷ்கோடி சென்று ஸ்ரீ கோதண்ட ராமரை தரிசித்த பிறகு அங்கிருந்து உங்களுடைய பாவங்களை தொலைத்து விட்டு புண்ணிய பலன்களுடன் ஸ்ரீ கோடீஸ்வரரை தரிசித்தால் உங்களுடைய புண்ணியங்கள் அதிகரித்து செல்வ நிலை உயரும் என்பதுதான் இதன் சூட்சமம்.
மேலும் இங்கு பந்தாடு நாயகி எனும் பெயரின் அம்பாள் காட்சி தருவதால் அம்பாளை தரிசித்த பிறகு கோடீஸ்வரரை தரிசிக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டும் ஆன்மீக அன்பர்களும் உண்டு. மேலும் எந்த தலத்திலும் காண இயலாத வகையில் இந்த தலத்தில் நவகிரகங்களின் சன்னதி அமைந்திருக்கிறது.
இத்தலம் நீங்கள் செல்வ நிலையில் உயர்வதுடன் மட்டுமல்லாமல் உயர்த்திக்கொண்ட செல்வ நிலையை தக்க வைத்துக் கொள்வதற்கான கல்வி அறிவையும் அள்ளி அருளும் தலம் என்பதால் இங்கு உயர்கல்வி கற்பதற்காக விருப்பம் கொண்டவர்கள் வருகை தந்து சிவபெருமானை வணங்குவதும் உண்டு.
மேலும் இங்குள்ள கிணறு அமுத கிணறு என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த கிணற்றில் உள்ள தீர்த்தத்தை எம்முடைய தலையில் தெளித்துக் கொள்வதன் மூலமும் பாவங்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகி செல்வ நிலை உயரும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இத்தலத்து இறைவனை ராமர், பிரம்மா, இந்திரன், நாரதர், மார்க்கண்டேய முனிவர்கள் உள்ளிட்ட பலர் வழிபட்டதாகவும், அதனால் இங்கு வழிபடுபவர்களின் செல்வநிலை உயர்வதாகவும் மக்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
இங்குள்ள விநாயகப் பெருமான் சுயம்பவானத் தோற்றம் என பக்தர்கள் கூறுவதால், இந்த விநாயகரை வணங்கினாலும் செல்வ நிலை உயரும் என்கிறார்கள்
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் இங்குள்ள சிவபெருமானை வணங்கினால் கோடி கணக்கிலான லிங்கங்களை வணங்கிய பலன் கிட்டும் என குறிப்பிடப்படுவதால், கோடீஸ்வரரை தரிசிப்பதற்கு மக்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏதேனும் விபத்து ஏற்பட்டு அதனால் அவள் அவலட்சணமான தோற்றத்தை கொண்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், அவர்களின் தோற்றம் அழகு மிக்கதாக மாறிவிடும் என்ற நம்பிக்கையும் இங்கு இருக்கிறது.
பாவங்கள் களைதல், புண்ணியங்கள் அதிகரித்தல், அழகு மேம்படுதல், கல்வி அறிவு அதிகரித்தல், செல்வநிலை உயர்வு என கணக்கில் அடங்கா நற்பலன்களை அள்ளி அள்ளி வழங்கும் இந்த கொட்டையூர் கோடீஸ்வரர் சிவபெருமானை ஒரு முறை தனுஷ்கோடி சென்று கோதண்டராமரை தரிசித்து விட்டு அதன் பிறகு கொட்டையூர் ஸ்ரீ கோடீஸ்வர பெருமானை தரிசித்து நாமும் நம்முடைய வாழ்க்கையில் உயர்வோம்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM