நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

15 Apr, 2024 | 04:59 PM
image

பொதுவாக நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் நுவரெலியாவில் வருடந்தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தகால களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவுக்கு வருகை  தருகின்றனர்.

நுவரெலியா மாநகர சபை ஏற்பாட்டில் இம்மாதம் முதலாம் திகதி முதல் தொடர்ச்சியாக 30ஆம் திகதி வரை தினந்தோறும் கலை கலாசார விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும்.

இந்த நாட்களில் நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு காலநிலை பொருத்தமானதாக உள்ளமையாலும் நாட்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையிலும், சித்திரை புத்தாண்டு பண்டிகை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு விடுமுறையினை கழிப்பதற்காக வருகை தந்துள்ளனர்.

இதனால் நுவரெலியா நகர் ஹக்கல பூங்கா, விக்டோரியா பூங்கா, கிரகறி பூங்கா, கிறகறி வாவி கரையிலும், உலக முடிவு, சீத்தாஎலிய கோவில், வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையம் போன்ற  பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டங்கூட்டமாக குவிந்து வருகின்றனர். 

அத்தோடு நுவரெலியா கிறகரி வாவி கரையில் அமைக்கப்பட்டுள்ள களியாட்ட நிகழ்வுகளிலும், மட்டக்குதிரை சவாரி செய்யும் இடத்திலும்  பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்படுகின்றனர்.

சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவுக்கு வருகை தருவதால் வாகன தரிப்பிடங்களிலும் நுவரெலியா - பதுளை, நுவரெலியா - கண்டி, நுவரெலியா - ஹட்டன் போன்ற பிரதான வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதனால் வாகனங்கள்  அணிவகுந்து ஊர்ந்து செல்கின்றன. இதனால் பிரதான நுழைவாயில் சோதனைச்சாவடி, நகர்ப்பகுதிகளில் கூடுதலாக போக்குவரத்து பொலிஸாரை பணியில் அமர்த்தி போக்குவ‌ர‌த்து நெரிச‌லை துரித‌மாக‌ சீர் செய்து வருகின்றனர். அத்துடன் பொது இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கடந்த வருடங்களை விட இம்முறை பெருந்திரளான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நுவரெலியாவிலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகளிலும் முன்கூட்டியே பதிவுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலில் புத்திசாலித்தனமான தீர்மானம் எடுப்பது நாட்டு...

2024-05-24 22:31:14
news-image

மரங்கள் விழும் ஆபத்து இருந்தால் 117...

2024-05-24 22:10:06
news-image

பதுளையில் இருந்து கொழும்புக்கு செல்லும் வீதியில்...

2024-05-24 20:48:18
news-image

கோப்பாயில் கசிப்பு விற்பனை; பெண் கைது

2024-05-24 19:34:10
news-image

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம்...

2024-05-24 18:51:41
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 4 பெண்கள் உட்பட...

2024-05-24 19:08:03
news-image

சிறந்த தலைவர் ஒருவர் செயற்படக்கூடிய விதம்...

2024-05-24 18:09:43
news-image

வாகரை மாங்கேணி கடலில் நீராடிய ஒருவர்...

2024-05-24 19:09:42
news-image

இலங்கையை விசேட கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்குமாறு...

2024-05-24 17:47:03
news-image

புத்தளம் எலுவாங்குளம் பகுதியில் முதலையால் மக்கள்...

2024-05-24 19:08:54
news-image

நுவரெலியாவில் புதிய தேநீர் திருவிழா 2024

2024-05-24 17:42:31
news-image

திடீரென உடைந்து வீழ்ந்த திவுலபிட்டிய வெசாக்...

2024-05-24 17:14:25