'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

Published By: Digital Desk 7

15 Apr, 2024 | 05:01 PM
image

'சந்திரமுகி 2' எனும் தோல்வி படத்தையும், 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற வணிக ரீதியான வெற்றி படத்தையும் வழங்கிய ராகவா லோரன்ஸ் சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'பென்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

“ரெமோ' படத்தை இயக்கிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் 'பென்ஸ்' எனும் திரைப்படத்தில் ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் மற்றும் ஜி ஸ்குவாட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதை எழுதியிருக்கும் இந்தத் திரைப்படத்தின் பணியாற்றும் ஏனைய நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரில் 'காரணத்துடன் போரிடும் போர் வீரன் என்றும், மிகவும் ஆபத்தான சிப்பாய்' என்றும் விளம்பரப்படுத்தப்பட்டிருப்பதால் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் -பாக்கியராஜ் கண்ணன் -ராகவா லோரன்ஸ் ஆகியோர் கூட்டணியில் தயாராக இருக்கும் 'பென்ஸ்' படத்தின் டைட்டில் லுக்கில் ஹெல்மெட் ஒன்றை வடிவமைத்து அதன் மீது பென்ஸ் என ஆங்கிலத்தில் அச்சடித்து வெளியிட்டிருப்பது படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்