தமிழக மண் சார்ந்த படைப்புகளை உணர்வுபூர்வமாக படைத்து ரசிகர்களை வசப்படுத்தி இருக்கும் இயக்குநர் முத்தையாவின் வாரிசான அறிமுக நடிகர் விஜய் முத்தையா நடிப்பில் தயாராகும் திரைப்படத்திற்கு, 'சுள்ளான் சேது' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது.
'குட்டி புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடிவீரன்', 'தேவராட்டம்', 'புலிக்குத்தி பாண்டி', 'விருமன்', 'காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம். முத்தையா இயக்கத்தில் உருவாகும் 'சுள்ளான் சேது' எனும் திரைப்படத்தில் விஜய் முத்தையா கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை பிரிகிடா சகா நடிக்கிறார். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை கே கே ஆர் சினிமாஸ் எனும் பட நிறுவனம் தயாரிப்பில் தயாரிப்பாளர் கே. கே. ரமேஷ் பாண்டியன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு 'சுள்ளான் சேது' என பெயரிடப்பட்டிருக்கிறது. அத்துடன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் என இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. முதல் போஸ்டரில் அறிமுக நாயகன் விஜய் முத்தையா கைதியாகவும், இரண்டாவது போஸ்டரில் அவர் வேடமணிந்து வதத்திற்கு தயாராகுவது போன்றும் போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM