ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும் விஜய்

Published By: Digital Desk 7

15 Apr, 2024 | 04:43 PM
image

தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் நடிப்பில் தயாராகி, செப்டம்பரில் வெளியாக இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'  எனும் தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்ற 'விசில் போடு' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஏழு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனையும் படைத்திருக்கிறது.

நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'GOAT' எனும் திரைப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி  உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். சித்தார்த்தா நூனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். சுரேஷ், கல்பாத்தி எஸ். கணேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுத, விஜய் -வெங்கட் பிரபு -யுவன் சங்கர் ராஜா -பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். துள்ளல் இசையில் அமைந்திருக்கும் இந்த பாடல் விஜயின் குரலில் வெளியாகி இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் விஜய் தொண்டர்களை நல்வழிப்படுத்துவார் என தமிழ் சமூகம் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் வழக்கம் போல் மது, போதை, பார்ட்டி என்று உற்சாகப்படுத்தும் வகையில் பாடியிருப்பது பெரும் சர்ச்சையையும், எதிர்மறையான விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற...

2024-05-29 17:35:12
news-image

மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும்...

2024-05-29 17:32:38
news-image

உலக நாயகன்' கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன்...

2024-05-29 17:26:07
news-image

புரட்சித் தமிழன்' சத்யராஜ் நடித்திருக்கும் 'வெப்பன்'...

2024-05-29 17:22:28
news-image

கவித்துவமான எக்சன் பொழுதுபோக்கு திரைப்படம் தான்...

2024-05-29 17:20:26
news-image

அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2-...

2024-05-29 16:58:10
news-image

செல்லப்பிராணியை தேடி இரு சிறார்களின் பயணத்தை...

2024-05-28 16:52:03
news-image

ரசிகர்களுக்கு இரட்டை பரிசை அளிக்கும் விஜய்

2024-05-28 16:10:02
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை'...

2024-05-28 16:02:09
news-image

உருவ கேலிக்கு துணை போயிருக்கும் இசைப்புயல்...

2024-05-28 06:02:25
news-image

கார்த்தி - அரவிந்த்சாமி இணையும் 'மெய்யழகன்'

2024-05-28 06:02:57
news-image

நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் 'மார்டின்'...

2024-05-28 06:05:33