ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்' படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

Published By: Digital Desk 7

15 Apr, 2024 | 04:29 PM
image

வானொலி தொகுப்பாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் , நடிகருமான ஆர் ஜே விஜய் முதல் முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'வைஃப் 'எனும் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆர். ஹேமநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வைஃப்' எனும் திரைப்படத்தில் ஆர் ஜே விஜய், அஞ்சலி  நாயர், மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லீ , அபிஷேக், ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நடராஜன், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கே. ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். திருமணமான இளம் தம்பதிகளின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவும் இளம் தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்