பிறந்து மூன்று வயதிற்குள் உள்ள குழந்தைகளில் எழுபத்தைந்து சதவீதத்தினர் ஒரு முறையேனும் ஓடிடிஸ் மீடியா எனப்படும் நடுக்காது தொற்று பாதிப்பிற்கு ஆளாகி இருப்பார்கள். இதற்கு தற்போது நவீன சிகிச்சை அறிமுகமாகி நல்ல பலனை வழங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பிறந்து ஆறு மாதங்களிலிருந்து பதினைந்து மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானவருக்கும், மூன்று வயதிற்குள் உள்ள குழந்தைகளில் எழுபத்தைந்து சதவீதத்தினருக்கும் ஓடிடிஸ் மீடியா எனும் நடுக்காது தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.
இவை கடுமையானதாகவும், மிதமானதாகவும், நாள்பட்டதாகவும் என மூன்று வகைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நடு காதுகளில் அமையப்பெற்றிருக்கும் அதிர்வுறும் எலும்புகளைக் கொண்ட செவிப்பறைக்கு பின்பகுதியில் காற்று நிரப்பப்பட்ட இடத்தில் உண்டாகும் தொற்று பாதிப்பே இதற்கு காரணம்.
இதனை உரிய முறையில் துல்லியமாக அவதானித்து சிகிச்சை பெற வேண்டும். அதனை பெறத் தவறினால் நடுக்காது பகுதியிலிருந்து தொண்டையின் பின்புறமாக சென்று பாதிப்பை கடுமையாக்கும். இது நடுக்காது பகுதியில் சளியை உருவாக்கி விடும்.
நடு காது பகுதியில் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. வேறு சிலருக்கு காய்ச்சல் , ஒவ்வாமை காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. இதனை உடனடியாக கவனித்து சிகிச்சை பெறாவிட்டால் காது கேளாமை பாதிப்பு ஏற்படக்கூடும் அல்லது பச்சிளம் குழந்தைகளுக்கு பேசும் திறன் தாமதமாகும். வேறு சிலருக்கு இந்தத் தொற்று காதில் வேறு பகுதிகளுக்கும் பரவத் தொடங்கும்.
குழந்தைகளை பொருத்தவரை காது வலி, குறிப்பாக உறங்கிக் கொண்டிருக்கும்போது பாதிக்கப்பட்ட காதை தனது கைகளால் இழுத்துக் கொள்வது, இதனால் உறக்கமின்மை பாதிப்பு உண்டாகும்.
ஒலிகளை கேட்பதில் தடுமாற்றம் உருவாகலாம். காய்ச்சல், தலைவலி, பசியின்மை போன்ற அறிகுறிகளும் ஏற்படும். பெரியவர்களை பொறுத்தவரை காது வலி, காதிலிருந்து திரவம் வடிதல், கேட்பதில் சமச்சீரற்ற தன்மை ஆகிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதன் போது மருத்துவர்கள் நிமோட்டிக் ஒட்டோஸ்கோப் எனும் பிரத்யேக கருவி மூலம் காது தொற்று பாதிப்பினை அளவிடுவர். Tympanometry Acoustic reflectometry, Tympanocentesis உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். இதனைத் தொடர்ந்து பாதிப்பின் தன்மையை பொறுத்தும், வயதை கணக்கிட்டும், நோயின் அறிகுறிகளை அவதானித்தும் சிகிச்சைகளை தீர்மானிப்பர்.
பொதுவாக நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்டு இருக்கும் பிரத்தியேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இதற்கு முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். சிலருக்கு ஆன்ட்டிபயாட்டிக் தெரபி என்ற சிகிச்சையை வழங்கி நிவாரணம் தருவர். வெகு சிலருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பிற்கு வேறு சில பரிசோதனைகளையும் மேற்கொண்ட பிறகு, Myringotomy எனும் சத்திர சிகிச்சையை நடுக்காது பகுதியில் மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.
டொக்டர் பாரதி மோகன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM