நாட்டில் தற்போது நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாகத் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால், நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுச் சுற்றுச்சூழலைச் சுத்தம் செய்தல், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை அழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகத் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே பதிவாகியுள்ளனர்.
ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் பதிவாகும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பு வீதமும் குறைந்துள்ளதுடன், இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் டெங்கு அபாயம் மிக்க வலயங்களாக 64 வலயங்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை இரண்டு வலயங்களாகக் கட்டுப்படுத்த கூடியதாக இருந்ததாகச் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM