ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விமானத்தில் மடிக்கணனி,ஜ-பேட்  உள்ளிட்ட இலத்திரணியல் சாதனங்கள் எடுத்து வர தடை விதித்துள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

எகிப்து, கட்டார் உள்ளிட்ட எட்டு நாடுகளிலிருந்து மடிக்கணனி, கேமரா மற்றும் ஐ-பேட்களை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்திருந்தது.

கையடக்கத்தொலைபேசி, மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அமெரிக்காவை தொடர்ந்து, பிரிட்டனும் இந்த தடையை பிறப்பித்துள்ளது.

துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிசியா, சவூதி அரேபியா ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரித்தானியாவுக்கு வரும் போது விமானங்களில் மடிக்கணனி, டேப்லட், ஐ-பேட் போன்ற இலத்திரணியில் சாதனங்களை எடுத்து வர பிரித்தானியா தடை விதித்துள்ளது. 

மடிக்கணனி உள்ளிட்ட இலத்திரணியல் பொருட்களின் உள்ளே வெடிக்கும் விதமான வெடிபொருட்கள் ஏதேனும் பதுக்கிவைத்து கொண்டு வரலாம் என கருதுவதால் குறித்த முடிவை பிரித்தானிய அரசு எடுத்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.