தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோலி ரூட் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு அருகாமையில் ஆணின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தினங்களாக காணாமல் போயிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் காளிமுத்து (61) என்பவரே உயிரிழந்துள்ளதாக சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று (15) காலை ஸ்தலத்துக்கு விரைந்த தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த நபர் காணாமல்போன விடயம் தொடர்பில் எவ்விதமான முறைப்பாடுகளும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் நேற்று இரவு முதலே குறிப்பிட்ட நபர் காணாமல் போனதாகவும் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM