தங்களது குடும்பத்தாரை ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்ல சிரியாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை 3 மாத காலம் கிட்டத்தட்ட தினமும் பலாத்காரம் செய்ய ஒருவரை அனுமதித்துள்ளார். 

ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு பிரச்சனை வலுத்து வருவதால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பாவில் குடியேறி வருகிறார்கள். அவர்களை கள்ளத்தனமாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்பவர்கள் அதிக அளவில் பணம் வாங்குகிறார்கள்.

இந்நிலையில் எப்படியாவது ஐரோப்பாவுக்கு சென்றால் போதும் என்ற நினைப்பில் சிரியாவைச் சேர்ந்த குறித்த அந்த நபர் தனது 30 வயது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் பல்கேரியாவுக்கு கடந்த ஆண்டு தப்பியோடிவிட்டார். அங்கிருந்து ஜெர்மனி செல்ல விரும்பிய அவரிடம் போதிய பணம் இருக்கவில்லை. 

தங்களை ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லும் நபருக்கு அளிக்க பணம் இல்லாததால் பணத்திற்கு பதில் தனது மனைவியை அந்த நபருக்கு பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளார்.