மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி - ஆர்யா இணைந்து வெளியிட்ட 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' பட ஃபர்ஸ்ட் லுக்

Published By: Vishnu

15 Apr, 2024 | 03:14 AM
image

தமிழ் திரையுலக ரசிகர்களிடையே நட்சத்திர அந்தஸ்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் பரத் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, ' திரையுலக ஆணழகன்' ஆர்யா‌ ஆகியோர் இணைந்து அவர்களுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' எனும் திரைப்படத்தில் பரத், அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ர லட்சுமி, ஷான், பி ஜி எஸ், ராஜாஜி, அருள் டி சங்கர், சையத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். காளிதாஸ் மற்றும் ஆர். கண்ணன் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோஸ் பிராங்கிளின் இசையமைத்திருக்கிறார்.  இந்த திரைப்படத்தை ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஃப்ரைடே ஃபிலிம் ஃபேக்டரி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கேப்டன் எம். பி. ஆனந்த் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் பரத்தின் கதாபாத்திர தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right