வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட இளம் ஆசிரியை உயிரிழப்பு - யாழில் துயரம்!

Published By: Vishnu

15 Apr, 2024 | 12:26 AM
image

யாழ்ப்பாணத்தில் இளம் ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை (13) உயிரிழந்துள்ளார். 

இதன்போது வண்ணார் பண்ணை, வடமேற்கு, ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி கல்பனா (37 வயது) என்ற, அராலி முருகமூர்த்தி பாடசாலையின் ஆங்கில ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வெள்ளிக்கிழமை (12) வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டது. இந்நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (13) அவர் உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உடலத்தை புதைக்குமாறு கூறி, உடலம் ஞாயிற்றுக்கிழமை (14) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும்...

2024-05-29 23:37:53
news-image

தேர்தலை பிற்போடவேண்டுமென்பது ஐக்கிய தேசிய கட்சியின்...

2024-05-29 16:28:15
news-image

ஜனாதிபதி தேர்தலை பிற்போட நாட்டு மக்கள்...

2024-05-29 16:26:18
news-image

முச்சக்கரவண்டியுடன் பஸ் மோதி விபத்து; 03...

2024-05-29 20:36:22
news-image

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை...

2024-05-29 20:12:26
news-image

இந்நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் மாற்றத்திற்காக...

2024-05-29 20:06:26
news-image

தோல்வியை மறைக்கவே தேர்தலை பிற்போடத் திட்டம்...

2024-05-29 16:21:18
news-image

அடுத்தடுத்து 4 பேர் பலியாகிய சோகம்;...

2024-05-29 19:48:51
news-image

7 வயது சிறுவனை தலைகீழாக கட்டி...

2024-05-29 19:29:26
news-image

பிரபல்யமானவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் -...

2024-05-29 16:27:11
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 12 பெண்கள் உட்பட...

2024-05-29 18:04:40
news-image

மாலபே, பொரலஸ்கமுவ, மாகும்புர ஆகிய நடுத்தர...

2024-05-29 16:19:38