யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து சென்ற கடுகதி ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் சாரதி தூக்கிவீசப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளானார்.

முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.