கல்முனை வடக்கு விவகாரம் : கறுப்பு பொங்கல் பொங்கியும் கறுப்பு கொடியுடன் மோட்டார் சைக்கிள் பவணியாகவும் 21 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

Published By: Vishnu

14 Apr, 2024 | 08:56 PM
image

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக ரீதியான பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக 21 ஆவது நாளாகவும் போராட்டம் கறுப்பு சித்திரை என்ற பெயருடன் ஞாயிற்றுக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மோட்டார் சைக்கிள் பவணி ஒன்று இளைஞர் கழகங்கள் விளையாட்டு கழகங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் கறுப்பு கொடி ஏந்தப்பட்டு பிரதேச செயலக முன்றலில் இருந்து ஆரம்பமாகி மணல்சேனை நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு துரைவந்தியன் மேடு துறைநீலாவணை பெரிய நீலாவணை மருதமுனை பாண்டிருப்பு கல்முனை நகரப்பகுதி ஊடாக சென்று மீண்டும் பிரதேச செயலக முன்றல் நோக்கி வந்தடைந்ததுடன் பல்வேறு கோஷங்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் முற்பகல் பிரதேச செயலகத்தின் முன்பாக கறுப்பு பொங்கல் பானையில் இடப்பட்டு பொங்கப்பட்டது. இந்நிலையில் அங்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் நீதிமன்ற கட்டளைப்படி பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் பொதுச்சொத்துக்கள் சேதமாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்காக  போராட்டக்காரர்கள் என மூவரின் பெயரை குறிப்பிட்டு அப்பகுதியில் கடிதம் ஒன்றினை வழங்கினர்.

இதனால் அங்கு சிறு பதற்றம் எற்பட்டது.பின்னர் பிரதேச செயலகம் மீது திணிக்கப்படும் நிருவாக அடக்கு முறைக்கும் அத்துமீறல்களையும் உடனடியாக  நிறுத்த வேண்டும் என இன்று கறுப்பு சித்திரையாக பிரகடனப்படுத்துவதாகவும் எனவே பிரதேச செயலகத்திற்கான நிருவாக உரிமையை வென்றெடுக்க அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கோரி நின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலை பிற்போடவேண்டுமென்பது ஐக்கிய தேசிய கட்சியின்...

2024-05-29 16:28:15
news-image

ஜனாதிபதி தேர்தலை பிற்போட நாட்டு மக்கள்...

2024-05-29 16:26:18
news-image

முச்சக்கரவண்டியுடன் பஸ் மோதி விபத்து; 03...

2024-05-29 20:36:22
news-image

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை...

2024-05-29 20:12:26
news-image

இந்நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் மாற்றத்திற்காக...

2024-05-29 20:06:26
news-image

தோல்வியை மறைக்கவே தேர்தலை பிற்போடத் திட்டம்...

2024-05-29 16:21:18
news-image

அடுத்தடுத்து 4 பேர் பலியாகிய சோகம்;...

2024-05-29 19:48:51
news-image

7 வயது சிறுவனை தலைகீழாக கட்டி...

2024-05-29 19:29:26
news-image

பிரபல்யமானவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் -...

2024-05-29 16:27:11
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 12 பெண்கள் உட்பட...

2024-05-29 18:04:40
news-image

மாலபே, பொரலஸ்கமுவ, மாகும்புர ஆகிய நடுத்தர...

2024-05-29 16:19:38
news-image

26 நாட்களில் 96,890 சுற்றுலாப் பயணிகள்...

2024-05-29 17:18:29