சுமார் 75 கொக்கெய்ன் போதைமாத்திரைகளை விழுங்கிய நிலையில் விமான நிலைத்திற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணொருவர் விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த 12 ஆம் திகதி விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மடகஸ்கரைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 3 கோடியே 50 இலட்சம் ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த பெண் எத்தியோப்பியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் மும்பையில் இருந்து இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
போதைப்பொருளை விழுங்கிய நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணை நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விழுங்கிய கொக்கெய்ன் மாத்திரைகளை வெளியேற்றினர்.
இதையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பெண் கொக்கெய்ன் போதை மாத்திரைகளுடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM