(நெவில் அன்தனி)
மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (13) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 27ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை ஒரு பந்து மீதம் இருக்க 3 விக்கெட்களால் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றிகொண்டது.
பெரும் சிரமத்துக்கு மத்தியில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ், கடைசி 2 ஓவர்களில் ஷிம்ரன் ஹெட்மயரின் அதிரடியால் வெற்றிபெற்றது.
பஞ்சாப் கிங்ஸினால் நிர்ணயிக்ப்பட்ட சுமாரான 148 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
சுமாரான மொத்த எண்ணிக்கை பெறப்பட்ட அப் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸின் வெற்றி இலகுவாக அமையவில்லை.
கடைசி இரண்டு ஓவர்களில் ராஜஸ்தான் றோயல்ஸின் வெற்றிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட பதில் அணித் தலைவர் சாம் கரன் 19ஆவது ஓவரை வீசினார்.
அந்த ஓவரில் 10 ஓட்டங்களைக் கொடுத்த சாம் கரன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசியதுடன் முதல் 2 பந்துகளில் ஷிம்ரன் ஹெட்மயரினால் ஓட்டம் பெற முடியாமல் போனது. ஆனால், அவர் அடுத்த 3 பந்துகளில் 6, 2, 6 என 14 ஓட்டங்களை விளாசி ராஜஸ்தான் றோயல்ஸின் வெற்றியை உறுதிசெய்தார்.
ராஜஸ்தான் றோயல்ஸ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது யஷஸ்வி ஜய்ஸ்வால், தனுஷ் கோட்டியன் ஆகிய இருவரும் 50 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தனுஷ் கோட்டியன் 24 ஓட்டங்களையும் யஷஸ்வி ஜய்ஸ்வால் 39 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழந்தனர்.
அதன் பின்னர் அணித் தலைவர் சஞ்சு செம்சன் (8),, ரியான் பரக் (23), த்ருவ் ஜுரெல் (6), ரோவ்மன் பவல் (11), கேஷவ் மகாராஜ் (1) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (138 - 7 விக்.)
ஆனால், ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
10 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறி உட்பட 27 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாம் கரன் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் சார்பாக மூன்று வீரர்கள் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
அவர்களில் 8ஆம் இலக்க வீரர் அஷுட்டோஷ் ஷர்மா அதிகபட்சமாக 31 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரை விட ஜிட்டேஷ் ஷர்மா 29 ஓட்டங்களையும் லியாம் லிவிங்ஸ்டோன் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த மூவரைவிட ஆரம்ப வீரர்களான ஆதர்வா தைடே, ஜொனி பெயாஸ்டோவ் ஆகிய இருவரும் தலா 15 ஓட்டங்களையும் ப்ரப்சிம்ரன் சிங் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கேஷவ் மகாராஜ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆவேஷ் கான் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM