டெல்ஹியுடனான போட்டியில் லக்னோவுக்கு சொந்த மண்ணில் தோல்வி

13 Apr, 2024 | 07:02 AM
image

(நெவில் அன்தனி)

லக்னோவ் எக்கானா கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை 6 விக்கெட்களால் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் வெற்றிகொண்டது.

லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 168 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 18.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப்  பெற்று வெற்றியீட்டியது.

இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் போட்டிகளில் பெரியளவில் பிரகாசிக்கத் தவறிவரும் ஆரம்ப வீரர் டேவிட் வோர்னர் இந்தப் போட்டியில் 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

எனினும் மற்றைய ஆரம்ப வீரர் ப்ரித்வி ஷா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 32 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தார்.

தொடர்ந்து ஜேக் ப்ரேசர் மெக்கேர்க், அணித் தலைவர் ரிஷாப் பான்ட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிப்பதறக்கு டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கு உதவினர்.

ஜேக் ப்ரேசர் மெக்கேர்க் 35 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 55 ஓட்டங்களையும் ரிஷாப் பான்ட் 24 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன் பின்னர் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (15 ஆ.இ.), ஷாய் ஹோப் (11 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றிக்கு தேவைப்பட்ட எஞ்சிய 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ரவி பிஷோனி 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது.

குவின்டன் டி கொக், அணித் தலைவர் கே. எல். ராகுல் ஆகிய இருவரும் 17 பந்துகளில் 28 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த போதிலும் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் துடுப்பாட்டத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

13 ஓவர்கள் நிறைவில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 7 விக்கெட்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்று மோசமான நிலையில் இருந்தது.

முன்வரிசையில் கே.எல். ராகுல் (39), குவின்டன் டி கொக் (19), மத்திய வரிசையில் தீப்பக் ஹூடா (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

எனினும் அயுஷ் படோனி (24 வயது), மொஹமத் அர்ஷாத் கான் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றுக்கொடுத்தனர்.

நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடிய அயுஷ் படோனி 55 ஓட்டங்களுடனும் அர்ஷாத் கான் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கலீல் அஹ்மத 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட...

2025-03-25 15:08:56
news-image

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு...

2025-03-24 15:37:18
news-image

பரபரப்புக்கு மத்தியில் மும்பை இண்டியன்ஸை கடைசி...

2025-03-24 02:56:34
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான்...

2025-03-23 21:38:21
news-image

18ஆவது IPL அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்...

2025-03-23 10:26:39
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11