யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி உயிரிழந்துள்ளார்.
தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான கோண்டாவிலை சேர்ந்த கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பாடசாலை ஒன்றில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக, நேற்றைய தினம் வியாழக்கிழமை கோப்பாய் - கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து இவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்து நாகரிகம் மற்றும் தமிழ் பாடங்களை உயர்தர மாணவர்களுக்கு கற்பிப்பதில் சிறந்தவராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM