the wall street journal
ஈரான் இன்று அல்லது நாளை இஸ்ரேலின் தென்பகுதி மீது அல்லது வடபகுதி மீது நேரடி தாக்குதலை மேற்கொள்ளலாம் கருதும் இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்வதற்காக தயாராகிவருகின்றது என விடயம் குறித்து நன்கு அறிந்த நபர் ஒருவர் தெரிவித்தார்.என அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது
அமெரிக்க ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது
இதேவேளை ஈரானின் தலைமைத்துவத்திடமிருந்து தகவல்களை பெற்றஒருவர் ஈரான் தாக்குதல்களிற்கு திட்டமிடுகின்றது ஆனால் இன்னமும் இறுதிமுடிவு எதனையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டார்.
கடந்தவாரம் சிரிய தலைநகரில் உள்ள துணை தூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்கு பதிலடி கொடுக்கவுள்ளதாக ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையணியின் தளபதிகள் உட்பட ஈரான் இராணுவத்தின் முக்கிய தளபதிகள் கொல்லப்ப்பட்டனர்.
முன்னதாக ஈரான் அல்லது அதன் சார்பு குழுக்கள் இஸ்ரேலின் தூதரகம் அல்லது அதற்கு சொந்தமான கட்டிடம் மீது தாக்குதலை மேற்கொள்வது உறுதி என்பதை வெளிப்படுத்தும் புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்திருந்தன.
எனினும் தற்போது இந்த தாக்குதல் இஸ்ரேலின் எல்லைக்குள் இடம்பெறலாம் என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன
அடுத்த சில நாட்களில் இஸ்ரேலிற்குள் ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபடலாம் என புலனாய்வு அமைப்புகள் தெரிவிப்பதாக விடயங்கள் குறித்து நன்கறிந்த அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இஸ்ரேலின் தூதரகங்கள் உட்பட அதனுடன் தொடர்புடைய பல கட்டிடங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வது குறித்து ஈரான் இராணுவம் ஈரானின் மததலைவர் ஆயத்தொல்லா அலி கமேனியுடன் ஆராய்ந்தது என இராணுவ ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிநவீன குறுந்தூர ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வது குறித்தும் ஈரான் இராணுவம் ஆராய்ந்துள்ளது.
இஸ்ரேலின் ஹைபா விமானநிலையம் டிமோனாவில் உள்ள அணுவாயுத பொருட்கள் தொழிற்சாலை போன்றவற்றின் மீது ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெறுவதை சித்தரிக்கும் வீடியோக்களை ஈரானின் புரட்சிகர காவல்படையின் சமூக ஊடகபக்கங்கள் வெளியிட்டுள்ளன.
ஈரானின் மின்சக்தி மற்றும் உப்புநீக்கும் தொழிற்சாலைகள் தாக்கப்படலாம் என ஈரான் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஈரானின் ஆன்மீகதலைவர் இதுவரை எந்த இறுதிமுடிவையும் எடுக்கவில்லை நேரடி தாக்குதல்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் இஸ்ரேல் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கலாம் பின்னர் ஈரானின் மூலோபாய உட்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என அவர் கருதுகின்றார்.
தாக்குதல் திட்டம் ஆன்மீகதலைவரின் முன்னிலையில் உள்ளது அவர் இன்னமும் உரிய பதிலை வழங்கவில்லை என ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிரியா ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்புகள் தாக்குதலை மேற்கொள்வது குறித்த திட்டமும் காணப்படுகின்றது. இந்த தாக்குதல்களை முன்னெடுப்பதற்காக ஈரான் சமீபத்தில் ஆளில்லா விமானங்களை வழங்கியுள்ளது என சிரிய அரசாங்கம் மற்றும் ஈரான் இராணுவத்தின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்குள் தாக்குதலை நடத்துவதை தவிர்ப்பதற்காக 1981ம் ஆண்டு சிரியாவிடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றிய கோலான் குன்றின் மீது தாக்குதலை மேற்கொள்ளும் திட்டமும் காணப்படுகின்றது . காசாவிலும் தாக்குதல் இடம்பெறலாம் .
இஸ்ரேலுடனான உறவுகளிற்காக விலைசெலுத்தவேண்டியிருக்கும் என்பதை காண்பிப்பதற்காக அராபிய நாடுகளில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் திட்டமும் உள்ளதாக விடயமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM