கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது !

12 Apr, 2024 | 10:10 AM
image

கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் மனைவியும் கள்ளக்காதலனும் பொலிஸாரால் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த சம்பவத்தில் அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த நபரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று வியாழக்கிழமை (11) அக்கரைப்பற்று வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்து.

பிரேத பரிசோதனையில் கழுத்தை அறுத்ததால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக குறித்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார், மரணம் தொடர்பில் உயிரிழந்தவரின் 33 வயதுடைய மனைவி மற்றும் அவரது 63 வயதுடைய கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியமின்றி நாட்டை கட்டியெழுப்புவோம் என்று...

2024-06-15 18:12:22
news-image

தேர்தல் கால பிரச்சாரமாக 13ஆவது திருத்தத்தை...

2024-06-15 18:29:03
news-image

இலஞ்சம் பெற்ற நீர்ப்பாசன திணைக்கள எந்திரியும்...

2024-06-15 16:55:52
news-image

ருமேனியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக்...

2024-06-15 16:39:31
news-image

கிழக்கு மாகாணத்தின் அமைச்சுகளுக்கு ஆளுநரால் புதிய...

2024-06-15 16:56:44
news-image

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் 70 மாணவர்களின்...

2024-06-15 15:11:12
news-image

தலைமன்னார்- கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாகப்...

2024-06-15 15:43:02
news-image

அடுத்த வாரம் இலங்கை வருகிறார் இந்திய...

2024-06-15 15:18:37
news-image

10 ஆவது சர்வதேச யோகா தினத்தை...

2024-06-15 14:41:09
news-image

கண்டியில் சக மாணவனை கத்தியால் குத்திய...

2024-06-15 13:44:03
news-image

மயிலை வேட்டையாடி உண்ட வெளிநாட்டவர்களும் வேடுவ...

2024-06-15 14:40:39
news-image

இன்றைய மரக்கறி விலைகள்

2024-06-15 13:15:00