நாம், தமிழ் சிங்கள புத்தாண்டை அரச விடுமுறையுடன் இரு இனங்களும் மகிழ்வாய் கொண்டாடுகின்றோம். அதனைப்போல ஒவ்வொரு கணமும் அமைய வேண்டும். ஒவ்வொரு விடயத்திலும் அமைய வேண்டும். மகிழ்ச்சியும் அதிகரிக்க வேண்டுமென இந்துக் குருமார் அமைப்பு அனுப்பி வைத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அமைதியும் புரிந்துணர்வும் நல்வாழ்வும் அமையட்டும்,
தமிழ் வருடங்களில் 38 ஆவது வருடமான சுப மங்களகர குரோதி என்னும் நாமத்துடன் பிறந்திருக்கும் தமிழ் புத்தாண்டானது சிறப்பான ஒரு வருடமாக அனைவருக்கும் அமைய வேண்டும்.
உலக மக்கள் அனைவரும் கடந்த தசாப்த காலமாகப் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளோம். அதில் குறிப்பாக எமது நாட்டு மக்கள் இன்னோரன்ன துயரங்களைத் தாங்கி சகித்து வாழ்ந்து வருகின்றனர்.
அனைத்து சமயங்களும் வாழ்வியலை வழிகாட்டி சுட்டி நிற்கின்ற அதேவேளையில் எமது சமயமானது அன்பு, கருணை, கொல்லாமை, பிறருக்குத் தீங்கு செய்யாமை, புரிந்துணர்வு போன்ற நற்செயல்களை சுட்டி நிற்கின்றது இவைபோன்ற விடயங்கள் தொலைத்துவிட்டோம் என்கின்ற காலப்பகுதியிலேயே நாம் அனைவரும் இருக்கின்றோம்.
நாம் எமது குடும்ப உறவுகளிடம் அன்பு செலுத்துவது போல் ஏனைய இனத்தார் சமூகத்தினர் சமயத்தாருடன் அன்பு செலுத்துதல் வேண்டும். மேலும் ஒவ்வொருவருடைய தனித்துவ பண்பாட்டினை மதித்துப் போற்றுதல் வேண்டியது சிறப்பானதும் பிரதானமான ஒன்றாக காணப்படுகின்றது.
அதனோடு தமிழ் மக்களாகிய நாம் எமது தேசத்தில் தொடர்ந்தும் வழிபாட்டு சுதந்திரம் உள்ளிட்ட பல சிக்கல்களை சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மேற் கூறிய அனைத்து நற்குணங்கள், விடயங்களை எம் தேசத்து அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும்.
நாம் தமிழ் சிங்கள புத்தாண்டை அரச விடுமுறையுடன் இரு இனங்களும் மகிழ்வாய் கொண்டாடுகின்றோம். அதனைப்போல ஒவ்வொரு கணமும் அமைய வேண்டும். ஒவ்வொரு விடயத்திலும் அமைய வேண்டும். மகிழ்ச்சியும் அதிகரிக்க வேண்டும்.
புதுவருடத்தில் நாம் அனைவருக்கும் இறை பிரார்த்தனையுடன் கூடிய இன்பகரமான வாழ்வு அமைய வேண்டும் என பரம்பொருளை வேண்டி இறை பிரார்த்தனையில் ஈடுபடுவோம். இச்சமயத்திலே இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் வழிகாட்டுதலையும் நிறைந்த இறை பிரார்த்தனையும் நல்லாசிகளையும் பகிர்ந்து மகிழ்ச்சியடைகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM