ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Vishnu

12 Apr, 2024 | 01:31 AM
image

டொக்டர் ஸ்ரீதேவி, தொகுப்பு அனுஷா

கோடை காலம் தொடங்கி விட்டால்... எம்முடைய வீடுகளில் இருக்கும் பச்சிளங் குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பவர்களை அதீத கவனத்துடன் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் கோடையில் வெப்பநிலை உயர்வடைந்து, எம்முடைய தலைப்பகுதி, மூளை, இதயம், சிறுநீரகம், தசைகள் ஆகியவற்றை பாதிக்கும். இதற்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சையையும், உரிய முறையான சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், இதனால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்கலாம் என அறிவுறுத்துகிறார்கள்.

ஒவ்வொரு கோடை காலத்தின் போதும் அதிகரிக்கும் வெப்பநிலையைத் தாங்க இயலாமல் முதியவர்கள், பச்சிளங் குழந்தைகள் மரணமடைவது உண்டு. மேலும் கோடைகால வெப்பம் குறித்து மக்களிடத்தில் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஹீட் ஸ்ட்ரோக் என்பது ஒரு அவசரமான மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலையாகும். இதன் போது எம்முடைய உடலின் வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹிட் அதாவது 40 டிகிரி செல்சியஸ் என்க்ஷ அளவினைக் கடந்து அதற்கு மேல் அதிகரிப்பதால் ஏற்படும் அவசர நிலையாகும். சூரிய ஒளியின் வெப்ப நிலை உயர்வை எதிர்கொள்ளும் போது எம்முடைய உடல் சில தருணங்களில் அதனை திறம்பட கையாளும் நிலையை தவற விடுகிறது. இதனால் எமது உடலில் வெப்பநிலை அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப நிலை பக்கவாதம் உண்டாகிறது. 

பொதுவாக எம்முடைய உடல் வெப்பநிலையை சமப்படுத்த.. கூடுதல் வெப்பநிலையை வியர்வை மூலம் வெளியேற்றுகிறது. கோடை காலத்தில் சூரிய ஒளியில் நீண்ட நேரம் பணியாற்றுபவர்கள் இத்தகைய பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். இதற்கு உரிய தருணத்தில் சிகிச்சை பெறாவிட்டால் உள்ளுறுப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்துவதுடன் மரணத்தையும் உண்டாக்குகிறது. 

வியர்வை அதிகம் வெளிவராத தருணங்களில் தோல் சிவந்து போதல் அல்லது சூடாகுதல் அல்லது வறண்டு போகுதல், மூச்சு திணறல், மயக்கம், சோர்வு, குமட்டல், வாந்தி, தலைவலி, சீரற்ற இதயத்துடிப்பு, குழப்பம், எரிச்சல்.. போன்ற அறிகுறிகள் தோன்றினால் உங்களுடைய உடல், வெப்பநிலையை சரியாக கையாள முடியாமல் தவிக்கிறது அல்லது தடுமாறுகிறது எனப் பொருள் கொள்ளலாம். 

பச்சிளங்குழந்தைகள், முதியவர்களை மட்டுமல்லாமல் உடற்பருமன், மது அருந்துபவர்கள், நீர் சத்து குறைபாடு உள்ளவர்கள், வெயில் காலத்தில் போதிய திரவ உணவினை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். 

இவர்களுக்கு மருத்துவர்கள் மலக்குடல் பகுதியில் வெப்பமானியை வைத்து வெப்பநிலையை அளவிடும் பரிசோதனை, ரத்தத்தில் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவு குறித்த பிரத்யேக பரிசோதனை, சிறுநீரின் நிறம் மற்றும் அடர்த்தி குறித்த பிரத்யேக பரிசோதனை, தசை செயல்பாட்டு திறன் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அளவிட்டு, சிகிச்சையை தீர்மானிப்பர்.

இதன் போது உடலை குளிர்விப்பதற்கான முதலுதவி சிகிச்சையை முதன்மையான நிவாரணமாக வழங்குவர். இதனைத் தொடர்ந்து பாதிப்பின் அறிகுறிக்கு ஏற்ப பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் அளிப்பர். மேலும் வாழ்க்கை நடைமுறையில் மாற்றம் செய்து கொள்ள வேண்டிய முறை குறித்து பரிந்துரைப்பர். இதனை முழுமையாகவும், உறுதியாகவும் கடைப்பிடித்தால் ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30
news-image

தழும்புகளில் ஏற்படும் வலிக்கான நிவாரண சிகிச்சை

2025-01-29 20:45:31
news-image

செர்வியோஜெனிக் தலைவலி பாதிப்புக்கான சிகிச்சை 

2025-01-27 19:26:02
news-image

மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில்...

2025-01-25 16:23:10
news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43