பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு

Published By: Vishnu

12 Apr, 2024 | 01:09 AM
image

'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராகவும், 'லவ் டுடே' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. 

'ஓ மை கடவுளே' எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'லவ் டுடே' எனும் வெற்றி படத்தை தொடர்ந்து மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்.

இது தொடர்பான அறிமுக அறிவிப்பு பிரத்யேக காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பிரதீப் ரங்கநாதனும், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவும் பத்து ஆண்டுகளுக்கு முன்பே குறும்படம் ஒன்றில் இணைந்திருக்கிறார்கள் என்றும், பத்தாண்டுக்கு பிறகு அவர்களின் கனவு இப்படத்தின் மூலம் நனவாகி இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இரண்டு இளம் பட்டதாரிகள் ஒன்றிணைந்திருப்பதால்.. இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. 

பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து- ஏஜிஎஸ் நிறுவனம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் மென்மையான காதலை உணர்வுபூர்வமாகவும், நகைச்சுவையாகவும் விவரிக்கும் படைப்பாக இருக்கும் என அவதானிக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற...

2024-05-29 17:35:12
news-image

மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும்...

2024-05-29 17:32:38
news-image

உலக நாயகன்' கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன்...

2024-05-29 17:26:07
news-image

புரட்சித் தமிழன்' சத்யராஜ் நடித்திருக்கும் 'வெப்பன்'...

2024-05-29 17:22:28
news-image

கவித்துவமான எக்சன் பொழுதுபோக்கு திரைப்படம் தான்...

2024-05-29 17:20:26
news-image

அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2-...

2024-05-29 16:58:10
news-image

செல்லப்பிராணியை தேடி இரு சிறார்களின் பயணத்தை...

2024-05-28 16:52:03
news-image

ரசிகர்களுக்கு இரட்டை பரிசை அளிக்கும் விஜய்

2024-05-28 16:10:02
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை'...

2024-05-28 16:02:09
news-image

உருவ கேலிக்கு துணை போயிருக்கும் இசைப்புயல்...

2024-05-28 06:02:25
news-image

கார்த்தி - அரவிந்த்சாமி இணையும் 'மெய்யழகன்'

2024-05-28 06:02:57
news-image

நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் 'மார்டின்'...

2024-05-28 06:05:33