தமிழ்நாடு சேலத்தில் வெள்ளிக்கிழமை (12) ஆரம்பமாகும் மாபெரும் தமிழ் இலக்கிய கலை விழாவில் இலங்கையிலிருந்து சென்றுள்ள மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உபதலைவரும் மும் மொழிகளின் எழுத்தாளருமான சதீஷ்குமார் சிவலிங்கம் பிரதம அதிதியாகக் கலந்துக்கொள்கிறார்.
இலக்கிய ஆளுமைகளான மாவட்ட நீதிபதி அ. அகமது ஜியாவுதீன் (தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணைய இயக்குனர்), இங்கிலாந்து செம்ஸ்போர்டு கவுன்சிலர் வழக்கறிஞர் பாப்பாவெற்றி, புலவர் சண்முகவடிவேல், கலைமாமணி லேனா தமிழ்வாணன், திருப்புகழ் அரைமணி சொ.சொ.மீனாட்சிசுந்தர், கவிக்கோ நெல்லை ஜெயந்தா, அயலக தமிழர் தின குழு இயக்குனர் பேராசிரியர் குறிஞ்சிவேந்தன் இலக்கிய சொற்பொழிவாளர் முனைவர் எஸ்.டி கலையமுதன், மலேசியா கலைஞர் முனைவர் ராகவி பவனேஸ்வரி, சிங்கப்பூர் தொழிலதிபர் திரைப்பட இயக்குனர் பெ.அருமைசந்திரன், நந்தவனம் சந்திரசேகரன், கவிஞர் மாதுகண்ணன், கவிஞர் இராஜேந்திர சோழன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஆன்மீகப் சொற்பொழிவாளர்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
வழக்கறிஞரும், பட்டிமன்ற நடுவருமான முனைவர் எஸ்.டி கலையமுதனின் அழைப்பின் பேரில் வருகைதரும் திருக்கையிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பராமாச்சாரிய சுவாமிகளின் ஆசியுரையுடன்,
சேலம் சண்முகா செவிலியர் கல்வி முத்தமிழ் அரங்கில் நடைபெறவுள்ள மூன்று நாள் நிகழ்வுகளில் நூல் வெளியீடுகள், சிறப்பு பட்டிமன்றம், இயல் இசை நடனக்கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM