இந்திய மக்களவைத் தேர்தல் கால கட்டமான இந்த தருணத்தில் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி இருக்கும் இயக்குநரும், நடிகருமான அமீர் நடிப்பில் தயாராகி வரும் 'உயிர் தமிழுக்கு' எனும் திரைப்படத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற 'ஓட்டு கேட்டு..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'உயிர் தமிழுக்கு' எனும் திரைப்படத்தில் அமீர், சாந்தினி, ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, ராஜசிம்மன், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்ரமணியம் சிவா, ராஜ் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 'மெலடி கிங்' வித்யாசாகர் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை மூன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆதம் பாவா தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. அத்துடன் மட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்ற 'ஆஞ்சு ஆஞ்சு..' எனும் பாடல் இணையத்தில் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'ஓட்டு கேட்டு ஓடி வருவான் நம்பிடாதீங்க.. காச நீட்டி ஆச காட்டுவான் வாங்கிடாதீங்க..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை அரசியல்வாதியும், பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் எழுத, பின்னணி பாடகர் குரு பாடியிருக்கிறார்.
தேர்தல் அரசியல் பரபரப்பாக இருக்கும் இந்த காலகட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல் வரிகள் இடம்பெற்றிருப்பது இப்பாடலை கவனிக்க வைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக 'சாயம் போகுதே சனநாயகம்.. அடிச்சு கிழிக்குதே பணநாயகம்..' எனும் வரிகள் இந்திய மக்களவைத் தேர்தலுக்கு பொருத்தமாக இருப்பதால்... அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த பாடல் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM